மேலும் அறிய

Pain Killer : வலி இருந்தாவே, வலி நிவாரணி மாத்திரையை சாப்புட்றீங்களா? ஆபத்தை உணருங்க.. இதைப்படிங்க..

வலி நிவாரணிகள் தொடக்கத்தில் வலியை நீக்கினாலும், நீண்ட காலத்திற்கு அவை நம் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்

தலைவலி, வயிற்றுவலி அல்லது வேறு ஏதேனும் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் பலர் உடனடியாக டிஸ்ப்ரின், காம்பிஃப்லாம் அல்லது ப்ரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த வகை மாத்திரைகளின் அதிகப்படியான அளவு ஆபத்துகளை ஏற்படுத்தும் என  மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வலி நிவாரணிகள் வலியிலிருந்து விரைவான நிவாரணம் அளிக்கின்றன. ஆனால் நாட்பட்ட அளவில் எடுத்துக்கொள்வது நம் ஆரோக்கியத்தில் சில கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருந்துகளை மருந்துச் சீட்டு இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதை அடிக்கடி பயன்படுத்தினால், உங்கள் ஆரோக்கியத்தில் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். இது தவிர, மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் அல்லது அதிகப்படியான அளவு எடுத்துக்கொள்ளுதல் பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், இப்யூபுரூஃபனை அதிகமாகப் பயன்படுத்துவதால் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மரணம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்தை உட்கொண்ட பிறகு அத்தகைய நோயாளிகளின் ஆபத்து 59 சதவீதமாக அதிகரிக்கிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கிளினிக்கல் எக்ஸலன்ஸ் ஆய்வின்படி, பராசிட்டமால், ஆஸ்பிரின் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துபவர்களுக்கு தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு காலப்போக்கில் ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும். இவை தவிர, பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

Pain Killer : வலி இருந்தாவே, வலி நிவாரணி மாத்திரையை சாப்புட்றீங்களா? ஆபத்தை உணருங்க.. இதைப்படிங்க..

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவற்றதாக்கிறது: வலி நிவாரணிகள் தொடக்கத்தில் வலியை நீக்கினாலும், நீண்ட காலத்திற்கு அவை நம் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். ஆக்ஸிகாண்ட்டின் போன்ற வலி நிவாரணிகளின் நீண்டகால பயன்பாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. இதனால் அடிக்கடி உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கல்லீரல் பாதிப்பு: நாம் உட்கொள்ளும் சில மருந்துகள் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். வலி நிவாரணிகளை நாம் அதிகமாகப் பயன்படுத்தும்போது, அதில் உள்ள நச்சுப் பொருட்களை நமது கல்லீரல் உறிஞ்சுகிறது. இது ஆபத்தான மற்றும் உயிருக்கு கெடுதலான நிலைமைக்கு வழிவகுக்கும். அத்துடன் கல்லீரலுக்கு சேதம் விளைவிக்கும்.

இதய பிரச்சனைகள்: சிலர் வலியிலிருந்து விரைவாக நிவாரணம் பெற அதிக வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இதை செய்வதன் மூலம் மருந்து நேரடியாக இரத்தத்தில் செல்கிறது. இந்த மருந்துகள் இதயத்தையும் பாதிக்கலாம். இதை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் கடுமையான இதய பிரச்சனைகள் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம். குடல் ஆரோக்கியம் மோசமடைகிறது. வலி நிவாரணிகளை உட்கொண்ட பிறகு ஓரிரு நாட்களுக்கு வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் ஏற்படலாம். வலி நிவாரணிகளை அதிகமாக எடுத்துக்கொள்வது மலச்சிக்கல், வீக்கம், வாய்வு மற்றும் மூல நோய் ஆகியவற்றை ஏற்படுத்தும், ஏனெனில் வலி நிவாரணிகள் நம் உடலின் ஜீரண ஆற்றலை மட்டுப்படுத்தும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget