மஞ்சள் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா? - சுட்டிக்காட்டும் ஊட்டச்சத்து நிபுணர்!
நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் சமையலுக்கு உதவுவதோடு, உணவில் ஊட்டச்சத்துகளையும் கூட்டுகிறது.
நல்ல உடல்நலத்தைப் பேண விரும்புபவர்கள் தங்கள் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது வழக்கம். மேற்கத்திய உலகத்தில் மஞ்சளின் மகிமை தெரிவதற்குப் பல நூற்றாண்டுகள் ஆன போதும், இந்தியாவின் சமையலறைகளில் மஞ்சள் மிக முக்கிய இடம் வகிக்கும் உணவுப் பொருளாக இருக்கிறது. நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் சமையலுக்கு உதவுவதோடு, உணவில் ஊட்டச்சத்துகளையும் கூட்டுகிறது.
சளி, இருமல் முதலான நோய்கள் ஏற்படும் போது பாலிலோ, வெந்நீரிலோ மஞ்சள் சேர்க்கப்பட்டு குடிப்பது வழக்கமாக இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதோடு, சளியையும், இருமலையும் நீக்குவதற்கு உதவுகிறது. நன்கு அரைக்கப்பட்ட மஞ்சளில் பல்வேறு நன்மைகள் இருக்கும் சூழலில், மஞ்சளின் வேர்கள் இன்னும் ஆரோக்கியம் நிறைந்தவை. மஞ்சளில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுவதாகப் பல்வேறு ஆய்வுகள் நிரூபனம் செய்கின்றன. மேலும் மஞ்சள் என்பது வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்வதோடு, தொண்டைப் பகுதியில் நல்ல பாக்டீரியா வளர்வதற்கும் மஞ்சள் பயன்படுகிறது.
பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைப் பயிற்சியாளருமான லூக் குடின்ஹோ, செரிமானத்திற்காக மஞ்சளைப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதற்காக மஞ்சளை எப்படி உட்கொள்வது என்று ஒரு சின்ன ரெசிபியையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
மேலும் படிக்க
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்