Nagarjuna: ’ஃபிட்டாக இருக்கீங்களே! எப்டி?’ நடிகர் நாகர்ஜூனாவின் பரிந்துரைகள் இதோ!
Nagarjuna: நாகர்ஜூனா டயட் முறை பற்றி அவர் பகிந்துள்ள தகவல்கள் பற்றி காணலாம்.
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாகர்ஜூனா தனது ஃபிட்னஸ் பற்றி சமீபத்திய நேர்காணலில் பகிந்துள்ளது குறித்து காணலாம்.
சினிமா ரசிகர்கள் எல்லாருக்குமே நாகர்ஜூனாவின் நடிப்பு மற்றிம் அவரது படங்கள் பிடிக்கும். 66 வயதிலும் ஆரோக்கியமாக ஃபிட்டாக இருப்பது பற்றி மனம் திறந்துள்ளார். பரபரப்பான வாழ்க்கை முறை, வேலை உள்ளிட்டவைகளுக்கு இடையே உடல்நலனை கவனிக்க நாஜர்ஜூனா மேற்கொள்ளும் வழிமுறைகள் பற்றி அவர் தெரிவித்துள்ளதை காணலாம்.
உடற்பயிற்சி:
எவ்வளவுதாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாஜர்ஜூனா வாரத்தில் 5 நாட்கள் நிச்சயம் உடற்பயிற்சி செய்யவாராம். காலையில் எழுந்து ஒரு மணி நேரம் கார்டியோ, வெயிட் ட்ரெய்னிங் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு தினத்தை தொடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
” கார்டியோ மற்றும் ஸ்ரெந்த் டிரெயினிங் நான் 30-35 ஆண்டுகளாக செய்து வருகிறேன். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதும் அவசியமானது. இதனால் நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருப்பேன்.ஜிம் செல்லவில்லை என்றல் நடைப்பயிற்சி, நீச்சல் ஆகியவற்றை செய்வேன்.” என ஃபிட்டாக இருப்பதற்கான காரணங்களாக அவர் குறிப்பிடுகிறார்.
உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்றால் நிச்சயம் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“ கார்டியோ அல்லது எந்தவித உடற்பயிற்சியாக இருந்தாலும் இதயதுடிப்பை 70% அதிகமாக இருக்கும்படி பார்த்துகொள்வது ஒரு டிரிக்.” என ஜிம் செல்வோருக்கு டிப்ஸ் வழங்கியுள்ளார்.
உணவுமுறை:
உணவுமுறையை பொறுத்தவரையில், சரிவிகித உணவு சாப்பிடுவதை நாகர்ஜூனா தெரிவு செய்வதாக குறிப்பிடுகிறார்.” சில ஆண்டுகளாக நான் சாப்பிடும் உணவுகள் முழுவதுமாக மாறிவிட்டது. என் உடலுக்கு சேராத உணவுகளை நான் தவிர்த்துவிடுகிறேன். 30 வயதுக்கு மேல் சில உணவுகளை சாப்பிட கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதற்கேற்றவாறு என் டயட் மாறிவிட்டது. அதனால் லைட்-ஆக உணர்கிறேன்.” என்று தெரிவித்தார்.
இரவு நேர உணவு சீக்கிரம் சாப்பிடுவது:
உணவுமுறைகளில் மாற்றம் எப்போது உணவு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் அவசியமானது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, நாகர்ஜூனா காலை மற்றும் இரவு நேர உணவுகளில் கவனம் எடுத்து சாப்பிடுவதாக தெரிவிக்கிறார். “ பல நாட்களாக நான் பின்பற்றி வரும் ஒன்று. நல்ல உதவியாகவும் இருக்கிறது. இரவு நேர உணவை அதிகபட்சமாக 7.30 மணிக்குள் முடித்துவிடுவேன். க்ளூட்டன் உணவுகளையும் சில சமயம் தவிர்த்துவிடுவேன்.” என்று தெரிவித்தார்.
'Intermittent fasting' - டயட்:
நாகர்ஜூனாவின் டயட்டில் 12:12 ’intermittent fasting' முறையை பின்பற்றுகிறார். அதாவது 12 மணி நேரத்திற்கு உணவு சாப்பிடுவது, 12 மணி நேர இடைவேளையில் உணவு ஏதும் சாப்பிடாமல் இருப்பது. நாகர்ஜூனா இரவு உணவை 7.30 மணிக்குள் முடித்துவிட்டால் மறுநாள் காலை 8 மணி வரை எந்த உணவையும் சாப்பிட மாட்டாராம்.
சீட் மீல்ஸ்:
பொதுவாகவே டயட் இருப்பவர்கள் ‘ Cheat Day' அல்லது 'Cheat Meal' என்று சொலவதுண்டு. இது சரியானதா என்றால் சில நாட்களில் மனதுக்கு மிகவும் பிடித்த உணவை சாப்பிடுவது தவறில்லை என்பது சிலரின் கருத்தாக இருக்கிறது. நாகர்ஜூனாவும் வாரத்தில் ஒருநாள் அவருக்குப் பிடித்த ஹைதராபாத் பிரியாணி, சாக்லெட் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதாக தெரிவித்தார்.
“ எனக்கு சாக்லெட் பிடிக்கும். உடற்பயிற்சி செய்யும் வரை சில வகையான உணவுகளை அளவோடு வாரத்தில் ஓரிரு நாள் சாப்பிடலாம். ஞாயிற்றுக்கிழமி என்னுடைய சீட் டே.. அன்றைய நாள் எனக்குப் பிடித்த உணவுகளை சாப்பிடுவேம். 'Cheat Day’ அன்று யோசிக்காமல் எனக்குப் பிடித்த உணவுகளை சாப்பிடுவேன்.” என்று தெரிவித்தார்.