Health Tips: டயாபடீஸ் இருக்கா? மதியம் என்ன சாப்பிடுறீங்க என்பதை கவனிங்க!
Health Tips: நீரிழிவு பாதிப்ப்பு உள்ளவர்கள் மதிய உணவில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கித்துவம் குறித்து பரிந்துரையை காணலாம்.
பொதுவாக காலை, இரவு உணவு என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் பகலில் என்ன சாப்பிடுகிறோம், மதிய உணவு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நீண்டநாட்கள் ஆரோக்கியத்திற்கு வழி மூன்று வேளை சாப்பிடும் உணவிலும் என்ன சாப்பிடுகிறோம் எனபதை கவனிக்க வேண்டும் என்று சொல்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்படிருப்பவர்கள் மதிய உணவை கவனிக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரித்துவிடும். மதிய உணவில் என்னென்ன சேர்க்கலாம், தவிர்க்கலாம் என்பது பற்றி காணலாம்.
மதிய உணவில் நார்ச்சத்து, புரதம் உள்ளிட்ட எல்லா சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்படி திட்டமிடவும். நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சம அளவு இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று கேட்டால் அளவோடு எடுத்துகொண்டால் ஆற்றல் கிடைக்கும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் மிக குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை சாப்பிடலாம். கினோவா, ப்ரவுன் அரிசி மற்றும் ஓட்ஸ், பழங்கள், முழு தானியங்கள், இறைச்சி, காய்கறிகள் என சரிவிகித உணவை உண்ணும்போது, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
தினமும் அப்பளம் சாப்பிடலாமா?
ஸ்வீட் சட்னி வகைகள், அப்பளம், ஊறுகாய் உள்ளிட்டவை தினமும் மதிய உணவில் இடம்பெறுகிறது எனில் அது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும். அடிக்கடி அப்பளம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஊறுகாய் வீட்டில் செய்து சாப்பிடலாம். அதுவும் தினமும் சாப்பிடுவது நல்லதல்ல.
மதிய உணவை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருப்பது நல்லது. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இதை பின்பற்ற வேண்டும். இது கடினமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் சாப்பிட முயற்சிக்கவும். இந்த நடைமுறையைப் பின்பற்றுவது உங்கள் உடல் ஒரு வழக்கமான பழக்கத்தை பின்பற்ற உதவுகிறது. அதோடு இரத்தத்தில் சர்க்கரை அளவில் திடீர் மாற்றங்களை தடுக்கும். மதிய உணவை 2 மணிக்கு மேல் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதை மாற்றுவது நல்லது. .எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை மதிய உணவு நேரத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம். வறுத்த உணவுகளில் எண்ணெய்,உப்பு ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பதால், அவை நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆரோக்கியமற்றவை என்று சொல்லப்படுகிறது.
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் டிரிங்க்ஸ் ஆகியவற்றை சாப்பிட கூடாது. இதில் மாம்பழம் மற்றும் லிச்சிஸ்,லஸ்ஸி போன்றவற்றை சாப்பிட கூடாது. நீர்ழிவு பாதிப்பு உள்ளவர்கள் கவனமுடன் உணவுகளை தெரிவு செய்ய வேண்டும். என்ன சாப்பிடுகிறோம் என்பதை கண்காணிக்க வேண்டும்.
தினமும் ஒரு வகையான கீரை
நீரிழிவு நோயாளிகள் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கீரையை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால், இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். கீரையில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. கீரை சூப் பொரியல், கூட்டு, சாதம் என ஏதேனும் ஒரு வகையில் கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவாகும். நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை அன்றாட உணவில் எடுத்து கொள்வதால்,இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. வெள்ளரிக்காயை சாலட் ஆகவோ, பச்சையாகவோ எடுத்து கொள்ளலாம். மதிய உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
உடற்பயிற்சி:
சீரான உடற்பயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். உடற்பயிற்சியின் போது தசை அசைவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோய் வராமல் தடுக்க சில எளிய உடற்பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி, ஜாகிங், சைக்ளிங் போன்றவற்றை அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றுவது நன்மை தரும்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் மருத்துவர்கள் / ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த பொதுவான தகவல். தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.