மேலும் அறிய

'கொஞ்சம் தசை கட்டு, சற்று பெரிய தலைக்கட்டு' நங்கூரம் என பாயும் நாய்கள்..!

Sighthound வகை நாய்கள் நல்ல நீளமான முக வெட்டு கொண்ட கூர் முக நாய்கள் . அதி வேகம் இதன் கூடுதல் சிறப்பு. அதற்கு ஏற்ற வகையில் நன்கு இறங்கிய நெஞ்சும், ஒட்டிய வயிறும் இவற்றுக்கு உண்டு.

                                                   வேட்டைத் துணைவன் - 7

 

Polygar hound -  பகுதி 2

ஒன்றுக்குமேட்பட்ட தோற்றக்கூறுகளையுடைய நாய்களைக்குறிக்கும் பொதுவான பெயராக “polygar hound” இருந்ததைப் பார்த்தோம். இந்தப் பெயரை கவனியுங்கள். பெயரின் இரண்டாவது வார்த்தையில் வரும் “hound” என்பது வேட்டை நாய்களைக் குறிக்கும் பொதுவான சொல்.  Grey hound துவங்கி உலகம் முழுவதும் உள்ள  பல்வேறு வேட்டை நாய் இனங்கள்  அவற்றுள் தான் அடங்கும் . 

Hound என்ற சொல் இதனுடன்  இடம் பெறுவதன் மூலம் நிச்சியம் இது வேட்டைக்கு பயன்படுத்தப் பட்டது என்றும். இவை ஒரு வேட்டை நாய்  இனம் என்றும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், Hound என்ற தலைப்பின் கீழும் ரெண்டு பிரிவுகள் உண்டு என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றுள் ஒன்று sight hound மற்றொன்று scent hound.  இவற்றுள் sighthound எனப்படுவது பார்வையால் முதலில் இரையை அறிந்து ஓடி வேட்டையாடும் என்ற அர்த்தத்திலும், scent hound என்படுவது வாசனையால் இரையை அறிந்து ஓடி வேட்டையாடும் என்ற அர்த்தத்திலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புரிந்துகொள்ளப்பட்டாலும் ரெண்டுமே இரையை விரட்டிப் பிடித்து கொல்லும் தேர்ந்த வேட்டையடிகளே. அதே வேளையில் ரெண்டுமே தோற்றத்தில் வேறு பட்டவையே !

கொஞ்சம் தசை கட்டு, சற்று பெரிய தலைக்கட்டு' நங்கூரம் என பாயும் நாய்கள்..!
கன்னிநாய்

Sighthound வகை நாய்கள் நல்ல நீளமான முக வெட்டு கொண்ட கூர் முக நாய்கள் . அதி வேகம் இதன் கூடுதல் சிறப்பு. அதற்கு ஏற்ற வகையில் நன்கு இறங்கிய நெஞ்சும், ஒட்டிய வயிறும் இவற்றுக்கு உண்டு. அவற்றுக்கு நல்லதொரு உதாரணம் grey hound, saluki. நமது ஊரில் இருந்து உதாரணம் வேண்டும் என்றால் கன்னி வகை நாய்களைச் சொல்லலாம்.

Scent hound வகை நாய்கள் கொஞ்சம் தசை கட்டுடன், சற்று பெரிய தலைக்கட்டுடனும் காணப்படும். வலுவான எலும்பும் நல்ல தாடை பலமும் இவற்றுக்கு உண்டு. இவை sighthound அளவுக்கு வேகம் உடையவை அல்ல. ஆனாலும் அதை விட மோப்ப சக்தி உடையவை.  மேலும் ரெண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. Sighthound . உதாரணம் Fox hound,

இந்த இடத்தில் நமக்கு polygar hound என்பது sight hound ஆ?  அல்லது scent hound ஆ? என்ற கேள்வி எழுந்தே ஆகவேண்டும் அல்லவா? முன்பு நாம் பார்த்த குறிப்புகளின் அடிப்படையில் இக்கேள்விக்கு விடை அளிக்க வேண்டுமென்றால் சிக்கல் தான். காரணம் ரெண்டுக்கும் பொருந்தும் தரவுகளை அல்லவா நாம் பார்த்திருக்கிறோம். சரி, அதை அங்கயே விட்டுவிட்டு வேறு ஒரு கதைக்கு நகர்வோம். நாய்கள் தவிர்த்து “poligar – polygar “ என்ற பெயரை நாம்  இதற்கு முன்பு கேட்டதுண்டா எனச் சிந்தித்துப் பாருங்கள். அனேகமாக எழு – எட்டு பாட புத்தகங்களில் பாளையகாரர்களின் போர் ( poligar war) பற்றி படித்திருப்போம். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான கட்ட பொம்முவாக சிவாஜி கணேசன் திரையில் தோன்றி நடித்ததைப் பார்த்திருப்போம். பாளையத்தை தனது ஆளுகைக்கு கீழ் வைத்திருப்பவன் பாளையக்காரன்.

பாளையம் என்ற சொல் “பாலாமு” என்ற தெலுங்குச் சொல்லில் இருந்து பிறக்கிறது. நாயக்கர்கள் ஆட்சியின் போது மதுரையை மையமாகக் கொண்டு 72 பாளையங்கள் பிரிக்கப்பட்டது. அவை அத்தனைக்கும் தனியே பாளையக்காரர்கள் நியமிக்கப் பட்டனர். அவை அத்தனையும் அவர்கள்  ஆளுகைக்கு உட்பட்டு இயங்கியது. அவர்களுள் 90 விழுக்காடு தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். பாளையம் என்ற பெயர் வரும் ஊர் பெயர்கள் அணைத்து தெலுங்கு மக்கள் வருகைக்குப் பின் இங்கு வந்தவைதான்.

ஆக இந்தப் பாளையக்காரர்களை குறிக்க பிரித்தானியர்கள் பயன்படுத்திய சொல் தான் poligar – polygar எல்லாம். இதே சொல் நமது அண்டை மாநிலங்களில் palegara, palegaadu, polegar  என்றும் பழக்கத்தில் இருந்தது.  முந்திய கட்டுரைகளில் நாம் பார்த்தது போல பிரித்தானியர்களுக்கு என தனித்த பெயரிடும் முறை இருக்கிறதல்லவா ! ஆம் அதேதான் எந்த இனக்குழு ஒரு பிரத்தியேக நாய் இனணத்தை வளர்கிறதோ அதன் பெயரேயே நாய் இனத்துடன் சேர்த்து அடையாளப் படுத்தப் படும். Poligar hound என்பதன் கதையும் அதுவே. வாஸ்தவத்தில் அது தரும் பொருள் poligar களின் நாய் என்பதுதான்.

1911 ஆம் ஆண்டு Robert leighton பல்வேறு தகவல்கள்களை தொகுத்து குடுத்த “The new book of the dog” என்ற புத்தகத்தில் Oriential greyhound என்ற தலைப்பில் hon.florence amherst  மிகச் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். பிரித்தானியர்களைப் பொறுத்த வரையில் sighthound வகை உடல் கூறு கொண்ட நாய்களை பெரும்பாலும் greyhound என்று அழைக்கும் வழக்கத்தை துடைக்கத்தில் கொண்டிருந்தனர் என்பதை நினைவில் கொள்ளவும். அக்கட்டுரையில்,

“இந்தியாவின் இன்னொரு greyhound வகை poligar hound கள். இவை மெட்ராஸ் மாகாணத்தை பூத்வீகமாகக் கொண்டது. இந்தப் பெயர் தென் கர்நாடக பகுதியை சேர்ந்த படைத்தளபதிகளின் பெயரின் இருந்து வந்தது. இவர்களே இவற்றை இன விருத்தி செய்பவர்களும் உரிமையாளர்களும் ஆவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.( இவையே இதற்கு முன்னரும் பதிவாகி உள்ளது. வேறு தலைப்புகளில் தரவுகள் அடிப்படையில் அவை எடுத்து விரிவாக அலசப்படும்)

எல்லாம் சரி poligar hound கள் sighthound களா அல்லது scent hound களா ? ரெண்டு வேறு பட்ட தொற்றக்கூறு உடைய நாய்களில் எது அசல் என்று கேட்கறீர்களா ? ரெண்டுமே தான். விஜயநகர ஆட்சியின் போது தமிழகம் வந்தடைந்த நாய்கள் தான் poligar வளர்த்தது. அப்படி வந்த 2, 3 வகை நாய்களையும் பிரித்தானியர்கள் poligar hound என்றே அழைத்தனர். அவற்றுள் sighthound களும் உண்டு scent hound களும் உண்டு.

போகிற போக்கில் ரெண்டு மூன்று என பருவெட்டாகச் சொல்லிவிட்டேன் அல்லவா.. உண்மைதான் என் கணக்குப்படி ரெண்டுக்கும் மேற்பட்டவைதான். இன்றைய தேதியில் அதில் ஒன்று  எல்லோரும் அறிந்த இராஜபாளையம் ( எப்படி அதற்கு மட்டுமே polygar hound என்றபெயர் சொந்த மானது என்ற கேள்வியும் வரவேண்டுமே – பின் வரும் கட்டுரைகளில் பார்க்கத்தான் போகிறோம் )

இன்னொன்று?  சில ஊகித்து இருக்கக்கூடும் இன்றைய தேதியில் அவை  கன்னி நாய்கள் தான். அது தாண்டி இன்னொன்று? ஆம் இருக்கிறது. .அன்றைய தேதியில் ஒன்றாக இன்றைய தேதியில் ஒன்றாக,  கூடுதல் விவரமாக என்ற இன்றய தேதியில் பெயர் பெற்ற இந்த  ரெண்டிலும் குருதி கலந்த ஒரு பொதுவான இனமாக. என்ன அது என்று கேக்கிறீர்களா? அவ்வளவு லேசில் சொல்லிவிட முடியுமா !நமது நாயினங்களின் மீது ஆர்வம் கொண்டு படிப்போர்கென்றே அவிழ்க்க காத்திருக்கும் முடிச்சை இன்றே அவிழ்ப்பது முறையல்ல..காத்திருப்போம்..!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget