அடேங்கப்பா ...ஒரு கனவுக்கு பின்னால இவ்வளவு சுவாரஸ்யம் இருக்கா? கனவுகளை பத்தி ஒரு சுவாரஸ்ய லிஸ்ட்..
கனவு காண்பவர்கள் விழித்தெழுந்து, அவர்களின் கனவில் உள்ள நிறத்தை தோராயமாக கூறுமாறு கேட்டபொழுது , கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரியான நிறங்களையே தேர்வு செய்துள்ளனர்.
நம் உடலில் சற்றும் ஓய்வெடுக்காது உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு உறுப்பு என்றால் அது மூளைதான். இரவிலும் மிகுந்த சுறு சுறுப்புடன் இருக்கும் . குறிப்பாக தூக்கத்தின் போது முன் மூளை மற்றும் நடு மூளையில் தீவிர மூளை செயல்பாடு இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சராசரியாக மனிதன் தனது இரவில் 2 மணி நேரம் வரையில் கனவுகள் காண்கிறானாம். ஒவ்வொரு கனவும் 20 நிமிடங்களை வரை நீடிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நாம் காணும் கனவுகளில் 95 சதவிகித கனவுகள் எழுந்தவுடன் மறந்துவிடும்படியாக இருக்கிறது. ஏனென்றால் தூக்கத்தில் மூளையின் தனது செயல்பாடுகளை நினைவகத்தில் சேமிப்பதை விரும்பவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு Behavioral and Brain Sciences என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் துங்கும் பொழுது விரைவாக கண்கள் அசையும் சமயத்தில் சில நரம்பியக்கடத்திகள், குறிப்பாக அசிடைல்கொலின் மற்றும் நோர்பைன்ப்ரைன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத்தான் எழுந்துக்கொள்ளும் பொழுது கனவுகளை மனிதன் மறந்துவிடுகிறான் என தெரியவந்துள்ளது.. பெரும்பாலான மக்கள் கனவுகள் நிறத்தில் இருப்பதாகக் கூறினாலும், ஏறத்தாழ 12% மக்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே கனவு காண்பதாகக் கூறுகின்றனர். கனவு காண்பவர்கள் விழித்தெழுந்து, அவர்களின் கனவில் உள்ள நிறத்தை தோராயமாக கூறுமாறு கேட்டபொழுது , கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரியான நிறங்களையே தேர்வு செய்துள்ளனர்.
தற்போது 25 வயதிற்குட்பட்டவர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கனவு காண்பதாக மிகவும் அரிதானவர்களே தெரிவிக்கிறனர். ஆனால் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள், கருப்பு மற்றும் வெள்ளை கனவுகள் பற்றி 25% நேரம் தெரிவிக்கின்றனர். அதற்கு காரணம் அவர்கள் இளம் வயதில் பழக்கப்பட்ட கருப்பு வெள்ளை டிவியாக கூட இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக ஆய்விற்கு உட்படுத்தும் பொழுது இருவரும் ஒரே மாதிரியான கனவுகளை காண்பதில்லை என்றும், அவர்கள் வித்தியாசமான கனவுகளை காண்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆடைகள் குறித்தான கனவுகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக வருகிறதாம்.
அதே போல பெண்கள் கனவுகளில் அதிக கதாபாத்திரங்கள் வருகின்றனவாம்.சரி மனிதர்கள் மட்டும்தான் கனவு காண முடியுமா என்றால் , இல்லை! நாய் , பூனை போன்ற விலங்குகளும் கனவுகளை காணும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உங்கள் வீட்டு செல்ல பிராணிகள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது பாதங்களை அசைத்தால் அல்லது, வாலை ஆட்டினால் அது கனவுகளை காணும் அறிகுறிகள்தானாம். ஆனால் மனிதர்களை போல உணர்ச்சிகள் ததும்பிய கனவினை விலங்குகளாலோ , பறவைகளாலோ பார்க்க முடியாது. கெட்ட கனவு காண்பது பொதுவான ஒன்றுதான் என்கிறது ஆய்வு.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )