தொப்பையைக் குறைக்க வேண்டுமா? டயட் எல்லாம் வேண்டும்… வெங்காயத்தை மட்டும் சாப்பிடுங்க. நல்ல ரிசஸ்ட் இருக்கு!
வெங்காயத்தை தினமும் உணவிலும், பச்சையாகவும் சாப்பிடலாம். ஒருவேளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட சொல்லலாம்..
வெங்காயத்தைத் தினமும் பச்சையாகவோ அல்லது வதக்கியோ சாப்பிடும் போது உடலில் உள்ள கெட்ட நீரை வேளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது. இதோடு அடி வயிற்றில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைத்து தொப்பையைக்குறைக்க உதவியாக உள்ளது.
நம்முடைய சமையலில் அசைவமாக இருந்தாலும், சைவமாக இருந்தாலும் வெங்காயத்திற்கு என்று தனி மவுசு உண்டு. வெங்காயத்தை அரைத்தோ? அல்லது வதக்கியோ? சமையல் செய்தாலும் அதற்கென்று தனிச்சுவையும் உண்டு. இது உணவிற்கான சுவையை வழங்குவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல பலனளிக்கும் எனக்கூறப்படுகிறது. குறிப்பாக வெங்காயத்தில் வைட்டமின் பி, வைட்டமின் சி, புரதங்கள், கார்போ ஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சல்பர் ஆகியவற்றுடன் தாது உப்புகள் மற்றும் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே இதனை தினமும் நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் போது நம்மை அறியாமலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறோம்.
பொதுவாக இன்றையக் காலத்தில் தேவையில்லாத பாஸ்ட் புட் உணவுகளைச்சாப்பிட்டு உடல் எடையை ஏற்றி வைத்திருப்போம். இதனால் ஏற்படும் தொப்பையைக்குறைக்க பல உடற்பயிற்சிகளை செய்து வந்தாலும் பலருக்கு எவ்வித பலனும் அளிக்காது. இதுப்போன்ற பிரச்சனைகளை நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் கவலை வேண்டாம். உங்களது தினசரி உணவோடு பச்சையாக 4 சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வாருங்கள். இது அடிவயிற்றில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பைக்கரைத்து தொப்பைக்குறைக்கவும் உதவியாக உள்ளது. நீங்கள் பல்லாரியும் சாப்பிடலாம். ஆனால் என்ன சின்ன வெங்காயத்தில் சல்பரின் அளவு அதிகமாக இருப்பதால் உங்களுக்குக் கூடுதல் பலனளிக்கும்.
இதோடு மட்டுமின்றி வெங்காயத்தில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரி்க்கிறது. எனவே அனீமியா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வெங்காயத்தை உணவில் உங்களது ரத்த அணுக்களை மேம்படுத்தலாம். இதோடு உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் ரத்தத்தில் உள்ள கொலஷ்டிராலின் அளவையும் குறைக்க உதவியாக உள்ளது. மேலும் கணையத்தில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்தி இன்சுலின் சுரப்பை சரியான அளவில் வைத்திருக்க உதவியாக உள்ளது.
வெங்காயத்தை தினமும் சாப்பிடும் கல்லீரல் பிரச்சனை, உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது. மேலும் சிறநீரகத்தில் கற்கள் உருவாவது மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது எனக்கூறப்படுகிறது. மேலும் மழை, குளிர் போன்ற பருவக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் வெங்காயம் உதவியாக உள்ளது.
இதுப்போன்ற பல்வேறு நன்மைகளை வெங்காயம் கொண்டிருப்பதால் தினமும் உணவிலும், பச்சையாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம். இதனால் பித்த நீர் அதிகமாக சுரப்பது மட்டுமின்றி மஞ்சள் காமாலை வராமலும் தடுக்கிறது. எனவே மறக்காமல் இனி அனைவரும் வெங்காயத்தை சாப்பிட மறந்துவிடாதீர்கள்…