மாத்தி யோசிங்க!! தினமும் 2 கப் ரோஸ் டீ: என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?
வழக்கமாக தேநீர் குடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் மாற்றி மாற்றி இதுபோன்ற தேநீர் வகைகளை அருந்தலாம். இது நல்ல மாற்றத்தைத் தரும்.
ஆயுர்வேத, சித்தா மருத்துவமானது ரோஜாப்பூ டீ குடித்தால் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று கூறுகிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்று கூறுகிறது. தினமும் இதனைக் குடித்தால் நமது தோல் பொலிவு பெறும் எனக் கூறுகிறது. ரோஜாப்பூவின் நறுமனமானது நமது மன அழுத்தங்களைப் போக்க உதவுவதாகவும் சித்தா, ஆயுர்வேதம் கூறுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. அதேபோல் அலர்ஜி எதிர்ப்பு அம்சங்களும் உள்ளன. இத்தனை அம்சங்கள் உள்ள ரோஜாப்பூ தேநீர் குறித்து இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் பார்ப்போம்.
ரோஜாவில் உள்ள மூலக் கூறுகள் வயிறு நிறைந்த ஒருவித உணர்வைத் தருவதால் தேவையில்லாத நொறுக்கு தீணிகளைத் தேட விடாது. இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எத்ரிப்பு சக்தி தருகிறது. அஜீரணக் கோளாறுகளில் இருந்து தீர்வு தருகிறது. தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. உடலில் உள்ள உஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது.
மாதவிடாய் வலியால் துடிக்கும் பெண்ணாக நீங்கள் இருந்தால் ரோஸ் டீ குடிக்கலாம்.
ரோஜாப்பூ டீ செய்வவது எப்படி?
உங்களுக்கு தினமும் ரோஜாப்பூ கிடைக்குமென்றால் நீங்கள் ஃப்ரெஷான ரோஜாப்பூவில் இருந்து டீ போடலாம். அப்படிக் கிடைக்காது என்றால் ரோஜாவை வாங்கி காயவைத்து அதை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். தினமும் ஒன்றரை கப் தண்ணீரில் ரோஜா இதழ்களைப் போட்டு அதை ஒரு கப் அளவு சுண்ட வைத்துக் குடிக்கலாம். வெறும் ரோஜா இதழ் மட்டும் அவ்வாறு குடிக்க விருப்பமில்லாவிட்டால் அத்துடன் கொஞ்சம் சாதாரண டீத்தூள் சேர்த்தும் குடிக்கலாம். இது மட்டுமல்லாமல் ஆவரம்பூ தேநீர், சங்குப்பூ தேநீர் ஆகியனவற்றையும் போட்டுக் குடிக்கலாம்.
ஆவாரம் பூ தேநீர் செய்வது எப்படி?
ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸரில் பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் வானலியை வைத்து தண்ணீர் ஊற்றி அத்துடன் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும். நிறம் மாறியதும், பால் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி குடிக்கவும். பாலைத் தவிர்த்துவிட்டும் குடிக்கலாம்.
சங்குப்பூ பூ தேநீர் செய்வது எப்படி?
சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.
வழக்கமாக தேநீர் குடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் மாற்றி மாற்றி இதுபோன்ற தேநீர் வகைகளை அருந்தலாம். இது நல்ல மாற்றத்தைத் தரும்.