அடை தோசை பிரியரா நீங்க? மொறுமொறுப்புக்கு இதை செஞ்சாவே போதும்..
சுவையான சுடான அடை தோசை செய்வது எப்படி தெரியுமா?
நம்மில் பலரும் தினசரி அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தோசை. வீட்டில் எந்த உணவு வைக்க நேரம் இல்லை என்றால் உடனே கடைக்கு சென்று தோசை மாவு வாங்கி வந்து தோசை சுடுவது பலருக்கு வழக்கமான ஒன்று. அப்படி எப்போதும் அரிசி மாவு தோசையை மட்டும் சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு ஒரு புது விதமான அடை தோசை செய்து கொடுத்தால் ரொம்ப பிடித்தமாக இருக்கும். அப்படி நமக்கு பிடித்தவர்களின் மனதை கவரும் வகையில் அடை தோசையை எப்படி சுட வேண்டும்? அதற்கு என்ன பொருட்கள் வேண்டும்?
அடை தோசைக்கு தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1/2 கப்
சிவப்பு மிளகாய் - 8
கடுகு , சீரகம் - 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை, இஞ்சி,தேங்காய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
வெங்காயம் - 2
எண்ணெய்- தேவையான அளவு
அடை தோசை மாவு தயாரித்து ஊற்றும் முறை :
இந்த உணவிற்கு தேவையான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி , சிவப்பு மிளகாய் ஆகியவற்றை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த இந்த பொருட்களை அடுத்த நாள் காலையில் அரை பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இவற்றை அரைத்த பின்பு இஞ்சி, தேங்காய் (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கருவேப்பிலையை சிறிதாக நறுக்கி மாவில் போட்டுவிட வேண்டும். அத்துடன் தேவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்து வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் இந்த அடை மாவை தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை சுட வேண்டும். இந்த மாவு இரண்டு புறமும் நன்றாக வெந்த பிறகு சுவையான அடை தோசையை நாம் சாப்பிடலாம். இப்படி செய்யும் போது நமக்கு வழக்கத்திற்கு மாறாக ஒரு புதுவிதமான தோசை உணவு கிடைக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:சரும நோய்களை போக்கும் சித்த மருத்துவம்.. ஒரு பார்வை