Hiccups Home Remedy: விக்கல் தொல்லை உங்களுக்கு சிக்கல்களை தருகிறதா..? இந்த 5 வீட்டு வைத்தியத்தை முயற்சி பண்ணுங்க..
Hiccups Home Remedy: விக்கல் உணவு காரணமாகவும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே ஏற்படுகிறது. இதனால்தான் தண்ணீர் குடித்தவுடன் விக்கல் நின்று விடுகிறது.
விக்கல் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து உங்களுக்கு தொந்தரவு செய்யலாம். பல நேரங்களில் விக்கல் இரண்டு முதல் நான்கு முறை வந்து தானாகவே நின்றுவிடும். ஒரு சில முறை தொடர்ந்து வந்து உங்களை தொந்தரவு செய்யும். முன்னோர்கள் கூற்றுப்படி, உங்களை ஒருவர் நினைத்தால் விக்கல் வரும் என்று சொல்லி வந்தனர். அந்த கதைகள் இப்போது காலம் காலமாக நம்மை தொடர்ந்து வருகிறது.
ஆனால் உண்மையில், விக்கல் உணவு காரணமாகவும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே ஏற்படுகிறது. இதனால்தான் தண்ணீர் குடித்தவுடன் விக்கல் நின்று விடுகிறது. நீண்ட நாட்களாக முடிவடையாத விக்கல்கள் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. அதிலிருந்து விடுபட வேண்டுமானால், சில வீட்டு வைத்தியங்களை (Home Remedies For Hiccups) பின்பற்றலாம். இதெல்லாம் செய்தால் விக்கல் சரி ஆகிவிடும் என்று நம்பப்படுகிறது.
விக்கல்களைத் தவிர்ப்பதற்கான வழிகள்:
1. இஞ்சி:
நீங்கள் இடைவிடாத விக்கல்களை அனுபவித்து கஷ்டப்படுகிறீர்கள் என்றால், இஞ்சியின் பயன்பாடு பெரும் உதவியாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு துண்டு சிறிய இஞ்சியை வாயில் போட்டு உறிஞ்சி வந்தால் விக்கல் பிரச்சனை குணமாகும்.
2. தேன்:
தேன் பல வகையான பிரச்சனைகளை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. விக்கல்களில் இருந்து நிவாரணம் பெறவும் தேன் உதவியாக இருக்கிறது. ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் விக்கல் பிரச்சனை குணமாகும்.
3. எலுமிச்சை:
விக்கல்கள் உங்களைத் தொந்தரவு செய்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றால், நீங்கள் எலுமிச்சையை நோக்கி செல்லுங்கள். பல பிரச்சனைகளை நீக்கும் பயனுள்ள எலுமிச்சை, விக்கல்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. விக்கல் ஏற்பட்டால், எலுமிச்சைத் துண்டை வாயில் வைத்து உறிஞ்சி வந்தால், பிரச்னை தீரும்.
4. புதினா-எலுமிச்சை சாறு:
விக்கல் பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெற வேண்டுமானால், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் புதினா இலைகளின் சாறு மற்றும் அரை எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் விக்கல் நிற்கும். இந்த பானம் பல வகையான உடல்நலப் பிரச்சனைகளையும் சரி செய்யும்.
5. கடுக்காய்
விக்கல் ஏற்பட்டால் உலர் இஞ்சி மற்றும் கடுக்காய் பயன்படுத்துவதும் நன்மை பயக்கும். உங்களுக்கு விக்கல் ஏற்படும் போதெல்லாம், உலர் இஞ்சி மற்றும் மைரோபாலன் பொடியை தலா ஒரு ஸ்பூன் எடுத்து, தண்ணீரில் கலந்து குடிக்கவும். இதனால் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
பொறுப்புத் துறப்பு: செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இந்த தகவல்கள், படித்ததும் கேட்டதை வைத்து எழுதப்பட்டுள்ளது. உங்களுக்கு தீரா பிரச்சனை ஏதேனும் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நன்மை தரும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )