மேலும் அறிய

துளசியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? முழு விபரம்!

கோடைக்காலம் வந்துவிட்டால், உடலில் வியர்வை நாற்றம் வராமல் இருப்பதற்காக முந்தைய நாளே குளிக்கும் தண்ணீரில் துளசி இலையைப்போட்டு ஊற வைத்துக்குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் வர வாய்ப்பில்லை.

துளசி இலையை தினமும் சாப்பிட்டுவந்தால் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பது தொடங்கி நரம்புக்கோளாறு, ஆஸ்துமா, இருமல்,  மற்றும் நீரழிவு நோய் போன்றவற்றிற்கு தீர்வு காண முடியும் எனக்கூறப்படுகிறது.

துளசி.. இறைவனுக்கு மாலையாகவும், வீட்டு மாடத்தில் வைக்கும் போது கிருமி நாசினியாகவும் பார்க்கப்படுகிறது. இப்படி துளசியை நாம் பயன்படுத்தி வரும் நிலையில், இதன் ஏராளமான மருத்துவக்குணங்களும் அடங்கியுள்ளது. துளசி செடியின் இலைகள், தண்டுகள் மற்றும் விதைகள் உண்ணக்கூடியவை என்பதால் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ளது. இதோடு அழற்சி எதிர்ப்புப் பண்புகளையும் இது கொண்டிருப்பதால் பல நோய்களைக் குணப்படுத்துவதாகவும் அமைகிறது.  

  • துளசியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? முழு விபரம்!

குறிப்பாக துளசி அல்லது துளசி சாற்றைத் தினமும் நம்மால் உட்கொள்ளும் போது நீரழிவு நோயைக்குணப்படுத்துவது முதல் சளித்தொல்லை, ஆஸ்துமா ஆகியவற்றைக்குணப்படுத்தவும் உதவுகிறது.  இதோடு மட்டுமின்றி துளசி சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானதாக உள்ளது. அதாவது காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் பணியை மேற்கொள்கிறது.

மேலும் துளசியைத் தினமும் சாப்பிட்டு வந்தால், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடிவதோடு ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு உடல் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கவும் உதவுகிறது.

இதோடு நீரழிவு மற்றும் சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டுவரும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவியாக உள்ளது. மேலும் துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக்கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற நோய்களைக் குணமாக்கும் எனக்கூறப்படுகிறது.  

குறிப்பாக சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்குத் தினமும் 3 வேளை, மூன்று தேக்கரண்டி துளசி சாறைக்கொடுக்கலாம். துளசி இலைச்சாறு எடுத்து அதில் தேன், இஞ்சி கலந்து பருகினால் கூடுதல் நன்மை பயக்கும்.

துளசியில் உள்ள மருத்துவக்குணங்களின் பட்டியல்கள் இதோ:

தினமும் துளசி இலையை தண்ணீரில் ஊற வைத்து அதனை தினமும் பருகி வரும் போது சர்க்கரை நோய் எப்பவும் நமக்கு ஏற்படாது.

தற்போது கோடைக்காலம் வந்துவிட்டால், உடலில் வியர்வை அதிகளவில் வெளியேறும். இதனால் வியர்வை நாற்றம் வராமல் இருப்பதற்காக முந்தைய நாளே குளிக்கும் தண்ணீரில் துளசி இலையைப்போட்டு ஊற வைக்கவேண்டும். பின்னர் காலையில் இந்த நீரைக்குளிக்கும் போது உடலில் வியர்வை நாற்றம் வர வாய்ப்பில்லை.

  • துளசியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? முழு விபரம்!

துளசி இலையை அரைத்து உடல் முழுவதும் பூசி வரும் போது, உடலில் சருமப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் வெட்டுக்காயங்களுக்கு துளசி இலைச்சாற்றைப் பயன்படுத்தும் போது விரைவில் காயம் குணமாகும் எனக்கூறப்படுகிறது.

இதோடு மட்டுமின்றி வீடுகளில் துளசி இலைகளை கொத்தாக கட்டிவைக்கும் போது, வீட்டில் கொசுக்கள் வர வாய்ப்பில்லை.  இதுப்போன்று பல்வேறு மருத்துவக்குணங்கள் அடங்கியுள்ளதால் அனைவரும் துளசியை இனி அனைவரும் பயன்படுத்தத் தொடங்குங்கள்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget