Nay Foods | பூண்டு முதல் பெப்ஸி, கோக் வரை.. செக்ஸுக்கு முன்பு இந்த உணவுகளுக்கு 'No' சொல்லுங்க..
செக்ஸுக்கு முன்பு சில உணவுகளை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்துகிறார் பாலியல் நிபுணர்.
உங்கள் பார்ட்னருடன் ஒரு ஹாட் டேட் அப்படியே ஒரு ரொமாண்டிக் டின்னர் முடித்துவிட்டு காலார ஊர்சுற்றி நடந்துவிட்டு இருவருமே இரவு உடலுறுவுக்குத் தயாரான மனநிலையோடு வருகிறீர்கள் ஆனால் அந்த நிமிடம் பார்த்து உங்களுக்கு வயிறு சற்று சரியில்லாமல் போகிறது அல்லது தலைவலி ஏற்படுகிறது.. டின்னரில் சாப்பிட்ட ஏதோ ஒரு உணவு எடக்கு மடக்காக வேலை காண்பிக்கிறது. உங்கள் ரொமாண்டிக் இரவுக்காகத் திட்டமிட்டிருந்த அத்தனையையும் டின்னரில் நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு சொதப்பிவிடுகிறது.
இதனால்தான் செக்ஸுக்கு முன்பு சில உணவுகளை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்துகிறார் பாலியல் நிபுணர்.
1. சீஸ்:
நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட சிறந்த உணவு சீஸ் ஆனால் உங்கள் பார்ட்னரோடு டேட்டிங் செல்லும்போது முதலில் தவிர்க்கவேண்டியது சீஸ்தான். அதிலும் நீங்கள் லேக்டோஸ் அலர்ஜி உள்ளவராக இருந்தால் சீஸைதான் முதலில் தவிர்க்க வேண்டும். அதனால், சீஸ் அதிகம் உள்ள பாஸ்தா, பீட்சா போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
2. காரமான உணவுகள்
செக்ஸ் காரசாரமாக இருக்கவேண்டும் என விரும்புபவர்கள் முதலில் தவிர்க்க வேண்டியது இந்த காரசார உணவுகளைதான். காரமான உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் ஆசிட் சுரப்பு அதிகரிக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படும். உங்கள் பார்ட்னர் ஆர்வமாக இருக்கும் சமயத்தில் இதுபோன்ற சூழலைத் தவிர்க்கலாமே.
3. மதுபானம்
பீர், விஸ்கி, அல்லது வைன் அருந்துவது செக்ஸுக்கான மூடை அதிகரிக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவை மெலட்டோனின் சுரப்பை அதிகரித்து தூக்கத்தை அதிகரிக்கும். அதனால் செக்ஸின்போதே தூக்கம் ஏற்பட்டுவிடவும் வாய்ப்புண்டு.
4. வெங்காயம் மற்றும் பூண்டு
வெங்காயம் மற்றும் பூண்டு வாயில் நாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஊரறிந்தது. அதனால் வறுத்த வெங்காயம் அல்லது உங்களுக்குப் பிடித்த பூண்டு சட்னி ஏதேனும் வீட்டில் இருந்தால்...சட்னியா? செக்ஸா ? என்பதை முடிவு செய்துகொள்ளவும்.
5. இனிப்பு உணவுகள்
இனிப்பு உணவுகள் பொதுவாக பாலுணர்வை குறைக்கும். இனிப்பில் இருக்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவால் உங்களால் செக்ஸில் உச்சத்தை அடைய முடியாமல் போகலாம்.
6. குளிர்பானங்கள்
பெப்ஸி கோக் போன்ற குளிர்பானங்கள் உடலுக்குக் கெடுதல் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் செக்ஸுக்கு முன்பு இதனை எடுத்துக்கொள்வதால் வயிற்றில் கேஸ் (Gas) சேர்ந்து பெருத்துப் போகும். இது ஏற்படுத்தும் சங்கடமான சூழலால் செக்ஸில் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் போகலாம்.
7. உப்பு அதிகம் இருக்கும் உணவுகள்
உப்பு அதிகம் இருக்கும் உணவுகளை உட்கொள்வதால் உடலில் ரத்த ஒட்டம் குறையும். நரம்புகளில் ரத்த ஒட்டம் தடைபடுவதால் உச்சம் அடைவதும் தடைபடும். இவை அத்தனையும் கடந்து, செக்ஸ் எல்லாம் இரண்டாம்பட்சம்தான் பார்ட்னருடன் கொண்டாட்டமாகச் சாப்பிடுவதுதான் வாழ்க்கை என ஒரு பார்ட்னர் உங்களுக்குக் கிடைக்கப்பெற்றால் நீங்கள் லக்கிதான்.