ஒரு நாளை எவ்வாறு ஆரோக்கியமானதாக தொடங்க வேண்டும்.. இதோ டிப்ஸ்!
அதிகாலை தூங்கி எழும் போது மகிழ்ச்சியாக அமைந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு நாளை ஆரோக்கியமானதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கு உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
அதிகாலை தூங்கி எழும் போது மகிழ்ச்சியாக அமைந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு நாளை ஆரோக்கியமானதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கு உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சிலர் காலை உணவு ஊறவைத்த உளர் பழங்களை எடுத்து கொள்வார்கள். இதனால் எண்ணற்ற பயன்கள் கிடைக்கிறது.
காலை சீக்கிரம் எழுந்து உடற் பயிற்சி செய்து, ஊட்டச்சத்து மிக்க உணவுகள் சாப்பிட்டு, மனஅழுத்த இல்லாமல், நிதானமாக அலுவலகம் செல்ல வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கும். இதை அன்றாடம் செய்வது பெரிய சவாலாக இருக்கும். இது போன்ற வாழ்வியல் முறையை பின்பற்றுவது மனதில் இருந்து தொடங்க வேண்டும். நீங்கள் என்ன மாதிரியான நாளை தொடங்க வேண்டும் என்று மனதில் எண்ண ஓட்டமாக மாற்றி கொள்ளுங்கள். எப்போதும் எழும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாக எழுந்து பழக்கமாக்கி கொள்ளுங்கள். 21 நாட்கள் இது போன்ற பயிற்சிகளை செய்தல், நாளடைவில் இது பழக்கமாகி விடும்.
இரவு முழுவதும், எந்த உணவும் எடுத்து கொள்ளாமல், 10-12 மணி நேர இடைவெளிக்கு பிறகு எடுத்து கொள்ளும் உணவு ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டும். க்ரீன் டீ குடிப்பது, ஊறவைத்த உளர் பழங்களை சாப்பிடுவது , பால் குடிப்பது போன்ற பல்வேறு பழக்கங்கள் இருக்கும்.
பாதாம் பருப்பு, அத்தி பழம், உளர் திராட்சை போன்றவற்றை இரவு தூங்குவதற்கு முன் தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்ததும் முதல் உணவாக எடுத்து கொள்வது, ஊட்டச்சத்துகளை தருகிறது.
பாதாம் பருப்பில் வைட்டமின் இ சத்து மற்றும் புரத சத்து நிறைந்து இருக்கிது . இது நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. மேலும், செரிமான சக்தியை அதிக படுத்துகிறது. பாதாம் பருப்பு ஊறவைத்து தோலை நீக்கி விட்டு பருப்பை சாப்பிட வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் காலை எழுந்து 4 -10 பருப்புகளை எடுத்து கொள்வது நல்லது. இது உடலுக்கு அத்தியாவசியமான அனைத்து அமினோ அமிலங்கள் நிறைந்து இருக்கிறது.
ஊறவைத்த அத்தி பழம் - அத்தி பழத்தில் இரும்பு சத்து மற்றும் நார்சத்து நிறைந்து இருக்கிறது. இது இரத்த சோகை, மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இதை எடுத்துகொள்வது நல்லது. காலை எழுந்ததும் முதலில் எடுத்து கொள்வதால் ஊட்டச்சத்துகள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும்.
உலர் திராட்சை - உலர் திராட்சை ஊறவைத்து எடுத்து கொள்வது, மலசிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும். இதில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவாகும்.
தினம் இது போன்ற உளர் பழங்களை எடுத்து கொள்வதால், உடலுக்கு ஊட்டச்சத்து மிக்கதாகவும், அந்த நாளை புத்துணர்வுடன் வைத்து கொள்ளவும் உதவும்