ToothBrush: பற்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கனுமா..? அப்போ எந்த டூத்ப்ரஷ் யூஸ் பண்ணனும்..?
வாய் ஆரோக்கியம் பேணுதல் மிகமிக அவசியம். அதற்கு முதலில் நாம் நம் பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வாய் ஆரோக்கியம் பேணுதல் மிகமிக அவசியம். அதற்கு முதலில் நாம் நம் பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நம் பல் வரிசை நேராக இருக்கலாம், தெத்துப் பல்லாக இருக்கலாம், பெரிய பற்களாக இருக்கலாம். ஆனால் பற்கள் எப்படி இருந்தாலும் அதை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் அதன் அழகு இருக்கிறது.
பற்களை சுத்தப்படுத்துவதில் சாதாரண ப்ரஷ் அல்லது எலக்ட்ரிக் ப்ரஷ் என எதை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். எதுவாக இருப்பினும் பிரஷ்ஷை தேர்வு செய்வதில் கவனம் தேவை எனக் கூறுகிறார் டாக்டர் பரம்ப்ரீத் கோலி. இவர் பல் சிகிச்சை நிபுணராவார். சரியான ப்ரெஷை தேர்வு செய்வது எப்படி என அவர் கூறும் டிப்ஸ் இதோ...
சரியான ப்ரிஸில்ட்ஸ் தேர்வு செய்ய வேண்டும்
1. மிருதுவான ப்ரிஸில்ட்ஸ்:
மிருதுவான ப்ரிஸில்ட்ஸ் உள்ள ப்ரெஷை தேர்வு செய்யுங்கள். அது ஈறுகள் மற்றும் பல் எனாமலை பாதுகாக்கும். சென்சிடிவ் பற்கள் உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவியானது. இவை ப்ளேக் மற்றும் அழுக்கை எந்தவித எரிச்சலும் இல்லாமல் நீக்க உதவுகிறது.
2. நடுத்தரமான ப்ரிஸில்ட்ஸ்:
இவ்வகை ப்ரிஸில்ட்ஸ்கள் மிகக் கடினமானவயாகவும் இல்லாமல் மிகவும் மிருதுவானவையாகவும் இல்லாமல், நடுத்தரமான தன்மையைக் கொண்டிருப்பவை. இவை பற்களை அதிக சக்தி கொண்டு சுத்தப்படுத்துகிறது. இருப்பினும் சென்சிடிவான ஈறுகளுக்கு இவை உகந்ததல்ல.
3. கடினமான ப்ரிஸில்ட்ஸ்
கடினமான ப்ரிஸில்ட்ஸ் அதிக விறைப்புத்தன்மை கொண்டவை . அதனால் இவ்வகை ப்ரிஸில்ட்ஸ் தீவிரமாக பற்களை சுத்தம் செய்யவும் முடியும். விடாபிடியான பிளேக் அல்லது கறைகளை அகற்றுவதில் இவை பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இவை ஈறுகள் மீது கடுமையானதாக இருக்கலாம். எனவே அவை வழக்கமான பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை, குறிப்பாக சென்சிடிவ் ஈறுகள் உள்ளவர்களுக்கு நிச்சயமாக பரிந்துரைக்கப்படுவதில்லை.
4. எக்ஸ்ட்ரா சாஃப்ட் பிரிஸ்டில்ஸ்
மிகவும் சென்சிடிவான பற்கள் மற்றும் ஈறுகள் கொண்டவர்களுக்கு இந்தவகை எக்ஸ்ட்ரா சாஃப்ட் பிரிஸ்டில்ஸ் மிகவும் முக்கியமானது. இவை அல்ட்ரா சாஃப்டாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
5. டேப்பர்ட் பிரிஸ்டில்ஸ்:
இவை நுனி கூர்மையாக அல்லது வட்டமான வடிவம் கொண்டதாக இருக்கும். இவை ப்ளேக் மற்றும் ஈறு நோய்களை தடுக்கக் கூடியதாகும்.
6. கிரிஸ்கிராஸ் பிரிஸ்டில்ஸ்:
கிறிஸ்கிராஸ் பிரிஸ்டில்ஸ் என்பது பல்வேறு ஆங்கிள்களில் பிரிஸ்டில்ஸ் திரும்பி இருக்கும். இது பற்களை சுத்தம் செய்ய வெகுவாக உதவும். சாதாரண பிரிஸ்டில்ஸ் செல்ல முடியாத இடத்திற்கு கூட இந்த பிரிஸ்டில்ஸ் செல்லும்.
7. மல்டி லெவல் பிரிஸ்டில்ஸ்:
மல்டி லெவல் பிரிஸ்டில்ஸ் என்பது ஒவ்வொரு அளவிலும் இருக்கும், சில வரிசை குட்டையாக, சில வரிசைகள் உயரமாக, சில வரிசைகள் கிறிஸ் கிராஸாக என இருக்கும்.
டாக்டர் கோலி “ இந்திய டெண்டல் அசோசியேஷன் (IDA)மற்றும் அமேரிக்க டெண்டல் அசோசியேஷன் (ADA) ஆகிய இரண்டுமே மிருதுவான ப்ரிஸில்ட்ஸ் இருக்கும் பல்துளக்கிகளை பயன்படுத்துவதையே பரிந்துரைக்கிறது. இருப்பினும் எவ்வகை ப்ரிஸில்ட்ஸ் பயன்படுத்த வேண்டும் என்பது தனிப்பட்ட ஒருவரின் வாய் சுகாதாரத்தின் அவசியம்.