மேலும் அறிய

AC Health Tips: ஏசியில் தூங்குவதால் தலை வலிக்குதா? என்ன காரணம்..இதோ தீர்வு!

இன்றைக்கு ஏசி இல்லாத வீடே இல்லை என்ற நிலைக்கு நம்முடைய சமூகம் வந்து விட்டது. அந்தளவுக்கு பருவகால மாறுபாட்டால் அளவுக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது.

கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் பலராலும் இனி மழைக்காலம் வரும் வரை ஏசி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் அதிக நேரம் ஏசியில் இருந்தால் பல பிரச்னைகள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம். 

இன்றைக்கு ஏசி இல்லாத வீடே இல்லை என்ற நிலைக்கு நம்முடைய சமூகம் வந்து விட்டது. அந்தளவுக்கு பருவகால மாறுபாட்டால் அளவுக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. ஏப்ரல், மே தான் கோடைகாலம் என்ற காலம் போய் பிப்ரவரி முதலே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வீட்டில் நிலவும் புழுக்கத்தை தவிர்க்க ஏசி பயன்படுத்துகிறோம். வீடுகள் முதல் அலுவலகங்கள் வரை எங்கும் ஏசி தான். அதேபோல் வணிக வளாகங்கள் முதல் வாகனங்கள் என எங்கு சென்றாலும் ஏசியில் தான் நாம் வாழ்கிறோம். இதனால் வெயில் பட்டாலே ஏதோ தீ பட்டதுபோல பதறுகிறோம். 

ஏசியில் இருக்கும்போது சுகமாக தான் இருக்கும். கொஞ்சம் கூட வெயிலின் தாக்கத்தை நாம் உணராத அளவுக்கு குளுகுளுவென அந்த காலநிலையை நாம் அனுபவிப்போம். ஆனால் வெப்பத்திலிருந்து தப்பிக்க நீங்கள் ஏசியில் அதிக நேரம் செலவிட்டால் கண்டிப்பாக பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். இது உடல்நலக்குறைவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கடுமையான பக்க விளைவுகளையும் உண்டாக்கும் என என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம். 

ஏசி அறையில் இருக்கும்போது சிலருக்குத் தலைவலி, தொண்டை வலி, சளி மற்றும் சரும வறட்சி போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுவதை நாம் உணர்வோம். ஆனாலும் ஏசியை தான் நாடுவோம்.  தொடர்ந்து வறண்ட குளிர்ந்த காற்றில் இருப்பது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதைத் தடுக்கிறது. இது சோர்வு, சைனஸ் பிரச்சனைகளை உண்டாக்கும். சில நேரங்களில் தூங்கினாலும் தலையில் கனமான உணர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். 

அறையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி காற்றை மிகவும் வறண்டதாக ஏசி மாற்றுகிறது. இது நீரிழப்பு மற்றும் தலைவலியை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் மிகவும் குளிர்ந்த காற்றில் இருக்கும்போது உடலைச் சூடாக வைத்திருக்க இரத்த நாளங்கள் வேகமாக சுருங்குகின்றன. இது தலை மற்றும் மூளையில் அழுத்தத்தை அதிகரித்து தலைவலியை உண்டாக்குகிறது. வறண்ட காற்று உங்கள் மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளி சவ்வுகளை உலரச் செய்கிறது. இது உங்கள் சைனஸ் பகுதிகளில் வீக்கம் அல்லது அடைப்பை ஏற்படுத்தலாம். இது தலைவலிக்கும் வழிவகுக்கும். மூடிய அறையில் இருப்பது தசை இறுக்கம் மற்றும் சோர்வை உண்டாக்கும். இதனால் உங்கள் தலை கனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். 

இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க ஏசியின் வெப்பநிலையை 24-26°C அளவில் வைத்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. ஏசியில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதைத் தவிர்த்து, இடையில் வெளியே சென்று வர வேண்டும். இரவு முழுக்க ஓட விடாமல் குறிப்பிட்ட நேரம் சென்றபின் மின் விசிறியை பயன்படுத்த வேண்டும். ஏசியில் இருக்கும்போது நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget