மேலும் அறிய

Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது

மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்ததால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு என கூறப்படுவதை கண்டித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஏற்பாடு செய்திருந்த நாடாளுமன்றப் பேரணியை காவல்துறை ஒடுக்கி வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்தில் மாணவர்களுடன் இணைந்துள்ளன.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி

முன்னதாக, நேற்று டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் உள்ளிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், லத்தியால் தாக்கியும் பேரணியை கட்டுப்படுத்த போலீசார் முயன்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

போராட்டத்தில் இணைந்த ராகுல்

இந்த சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த இளைஞர்கள், இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிவரும் இளைஞர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் எம்.பி-க்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து, ராகுல் காந்தி பேரணி நடத்தினார். அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லம் வரை  பேரணியாக சென்ற காங்கிரஸார், இல்லத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுலுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி - கைது

இந்த போராட்டத்தின் போது, நீட் வினாத்தாள் மோசடி விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், அது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்து, அங்கு வந்த டெல்லி காவல்துறையினர், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராகுல் காந்தி வேண்டுகோள்

இதனிடையே, மாணவர்கள் மீதான தாக்குதல், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இதற்குப் பதிலளிக்காமலும், எந்த பொறுப்பையும் ஏற்காமலும், இந்த விவகாரத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு நீதி கோரி பிரதமர் இல்லத்தின் முன்பு நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நாட்டுப்பற்றுள்ள இந்தியர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார். 

இந்நிலையில், தற்போது ராகுல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
Embed widget