மேலும் அறிய

குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!

9 லட்சத்துக்கும் குறைவா… சிட்ரோயன் புது மாடல் கார்; பசால்ட் எக்ஸ் கம்ஃபர்ட் எடிஷன் ரூ.8.75 லட்சத்தில் அறிமுகம்

சிட்ரோயன் இந்தியா நிறுவனம், தனது எஸ்யுவி மாடலான பசால்ட்டின் புதிய ஸ்பெஷல் எடிஷனை பசால்ட் எக்ஸ் கம்ஃபர்ட் எடிஷன் (Citroen Basalt X Comfort Edition) என்ற பெயரில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சௌகரியங்களை வழங்கும் நோக்கில் இந்த கார் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான விவரங்கள் இதோ.

விலை

புதிய சிட்ரோயன் பசால்ட் எக்ஸ் கம்ஃபர்ட் எடிஷனின் விலை ரூ. 8.75 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கட்டுப்படியாகும் விலையில் கூடுதல் சொகுசு அம்சங்களுடன் இந்த மாடல் களமிறக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு


இந்த கார் மிகவும் நேர்த்தியான எஸ்யுவி கூபே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் வெளிப்புறம் சாய்வான ரூஃப்லைன், தனித்துவமான வி-வடிவ எல்இடி டிஆர்எல்கள், உறுதியான வீல் ஆர்ச்கள் மற்றும் கரடுமுரடான சாலைகளையும் எளிதில் கடக்கக்கூடிய வகையிலான அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றுடன் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கம்ஃபர்ட் எடிஷன் என்பதால், இதன் உட்புற கேபின் பயணிகளின் சொகுசான பயணத்தை முழுமையாக மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரத்யேகமான சீட் கவர்கள் (Seat covers), நீண்ட தூரப் பயணங்களிலும் சோர்வைத் தடுக்க உதவும் சௌகரியமான குஷன்கள், மேம்படுத்தப்பட்ட டேஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் பின்பக்கப் பயணிகளுக்கான கூடுதல் இடவசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.


குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!

இன்ஜின்

இந்த மாடலில் 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 81 பிஎச்பி பவரையும், 115 என்எம்) டார்க் திறனையும் சீராக வெளிப்படுத்தும். இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்

சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் இந்த இன்ஜின் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு சுமார் 18 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இதில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் ஆகிய முக்கியப் பாதுகாப்பு வசதிகள் தரநிலையாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், சிட்ரோயன் நிறுவனத்தின் பாரம்பரியமான அட்வான்ஸ்டு கம்ஃபர்ட் சஸ்பென்ஷன் செட்டப் இதிலும் தொடர்கிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
புதிய அவதாரத்தில் பஜாஜ் பல்சர் RS200..அசத்தும் அம்சங்கள்..என்னென்ன மாற்றங்கள்? விலை எவ்வளவு?
புதிய அவதாரத்தில் பஜாஜ் பல்சர் RS200..அசத்தும் அம்சங்கள்..என்னென்ன மாற்றங்கள்? விலை எவ்வளவு?
December Car Launch: ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
"கோமாளி ஆட்சியாளர்களின் Ego-வால் துயரில் விவசாயிகள்" - முதல்வர் மீது எதிர்க்கட்சித்தலைவர் காட்டம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Geetha Jeevan: ”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
IND vs NZ: இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட் தேவை.. நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா பும்ரா படை?
IND vs NZ: இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட் தேவை.. நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா பும்ரா படை?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
Embed widget