மேலும் அறிய

Drumstick Tree : ‘முருங்கை மரம் வீட்டில் வளர்க்கலாமா?’ பேய் குடியிருக்கும் என்பது உண்மையா?

'முருங்கை மரமும் கறவை மாடும் இருந்தால் ஒரு குடும்பமே பிழைத்துக்கொள்ளும் என்ற முதுமொழி இருக்கிறது. அதனால், முருங்கை மரத்தை பயமில்லாமல் வீடுகளில் வளர்க்கலாம்’

கிராமங்களில் முருங்கை மரமும் வேப்ப மரமும் இல்லாத வீடுகளே முன்னர் இருக்காது. ஆனால், காலப்போக்கில் சிலர் சொல்வதை கேட்டுக்கொண்டு முருங்கை மரங்களை வெட்டி வீசியவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, முருங்கை மரம் வீட்டில் இருந்தால் அதில் பேய், பிசாசு குடியிருக்கும் என்று யாரோ சொன்னதை பிடித்துக்கொண்டு பலரும் முருங்கை மரம் வைப்பதற்கு பயந்த கதைகள் கிராமங்களிலும் நகரங்களிலும் ஏராளமாக இருக்கின்றன.

முருங்கை மரம் வைத்தால் பேய் அதில் ஏறி குடியிருக்குமா?

விண்வெளிக்கு ராக்கெட் விட்டிருந்த காலம் போய் அங்கேயே மனிதன் சென்று குடியிருப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டிருக்கும் இந்த காலக்கட்டத்திலும் பலர் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை நம்பி ஏமாந்துபோயிருக்கின்றனர். அதிலும் முருங்கை மரத்தில் பேய் குடியிருக்கும் என்று சொல்லி வைக்கப்பட்ட பொய்யை நம்பி பலரும் வீட்டில் முருங்கை மரம் வைக்கவே அச்சப்பட்டு இருக்கின்றனர். அதற்கு காரணம், விக்கிரமாதித்தியன் கதைகளில் வேதாளம் முருங்கை மரத்தில் குடியிருக்கும் என்று சொல்லப்பட்டதுதான். அதன் தொடர்ச்சியாக வேதாளம், பேயாகி, பின்னர் பிசாசு ஆகி மோகினி, யட்சி என பல ஊர்களில் பல பெயர்களில் இல்லவே இல்லாத உருவத்தை முருங்கை மரத்தில் ஏற்றி பலர் அச்சமடைந்துள்ளனர். உண்மையில், முருங்கை மரம், புளியம் மரம் என எந்த மரத்திலும் பேய் குடியேறாது என்பதுதான் உண்மை. அதனினும் உண்மை பேய் என்ற ஒன்றே கிடையாது என்பது.

முருங்கை மரமும் பசு மாடும்

எனவே, உடலுக்கு சத்துக் கொடுக்கும் முருங்கை மரத்தை தாராளமாக வீடுகளில் வைக்கலாம். ஆனால், அதில் அதிகமாக பூச்சிகள் தாக்கும் என்பதால் ஜன்னலோரம் அல்லது கதவு அருகே முருங்கை மரத்தை வைக்கக் கூடாது. அதற்கு பதில் வீட்டு வேலியோரத்திலோ, வீட்டிற்கு சற்று அருகிலோ தாரளமாக முருங்கை மரத்தை நட்டு வளர்க்கலாம். முருங்கை மரமும் பசுமாடும் இருந்தால் ஒரு குடும்பமே பிழைத்துக்கொள்ளும் என்ற முதுமொழி இருக்கிறது. அதற்கு காரணமும் முருங்கை கீரை, தண்டு உள்ளிடவைகளை வைத்து சமைத்துக்கொள்ளலாம் என்பதும் பசுமாட்டின் பாலை குடித்தும், அதை விற்றும் தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பதும்தான். ஒரு குடும்பத்தையே வாழ வைக்கும் முருங்கை மரத்தை போய் பேய் குடியிருக்கும் வீடு மாதிரி யாரோ சிலர் சித்தரித்தது இன்றும் பலரது நெஞ்சில் அச்சமாக மாறிக்கிடக்கிறது.

அதோடு, வேப்பம் மரம் வைப்பதிலும் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால், வேப்பம் மரம் வீடுகளில் வளர்ப்பது அவ்வளவு நல்லது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காற்றை சுத்தப்படுத்தி தருவதிலும், அதன் இலையை அரைத்து பய்ன்படுத்தினால் கிருமி நாசினியாகவும் பயன்படும் வல்லமை கொண்டது இந்த வேப்பமரம். அதோடு, தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மரமாக இருக்கும் வேப்பம் மரத்தையும் எந்த தயக்கமும் இன்றி வீடுகளில் வளர்க்கலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Embed widget