மேலும் அறிய

டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்

தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் அறிவியல் பூர்வமான நன்மைகள் என்னென்ன என்று காணலாம்.

இப்போதெல்லாம் சாப்பாடு என்பது சோபா மீது அமர்ந்து டிவியை பார்த்துக்கொண்டே உண்பது அல்லது டைனில் டேபிளில் சாப்பிடுவது என்று மாறிவிட்டது. ஆனால் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுவதால் ஏராளமான பலன்கள் உள்ளன.

தமிழர் மரபில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உணவு உண்பது வெறும் கலாச்சார பழக்கம் மட்டுமல்ல. அதற்குப் பின்னால் பல அறிவியல் மற்றும் மருத்துவக் காரணங்கள் உள்ளன.

தரையில் சம்மணமிட்டு அமரும்போது, நமது உடல் சுகாசனம் அல்லது பத்மாசனம் என்ற யோக நிலையை அடைகிறது. இந்த நிலை செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. இதில் மேலும் என்னென்ன பலன்கள்? அதற்கான அறிவியல் விளக்கங்கள் என்ன? என்று காணலாம்.

செரிமான உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் குவிதல்

நாற்காலியில் கால்களைத் தொங்கவிட்டு அமரும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக உடலின் ரத்த ஓட்டம் கால்களை நோக்கி அதிகமாகச் செல்லும். ஆனால், தரையில் கால்களை மடக்கி சம்மணமிட்டு அமரும்போது, கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைக்கப்பட்டு, செரிமான உறுப்புகளான வயிறு, இதயம் மற்றும் குடல் பகுதிகளுக்கு அதிக ரத்தம் சீராகச் செல்கிறது. இந்த அதீத ரத்த ஓட்டம், செரிமான உறுப்புகளின் ஆற்றலை பலமடங்கு அதிகரிக்கிறது.

வயிற்றுத் தசைகளின் இயக்கம்

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, தட்டை நோக்கி முன்னோக்கி வளைந்து, உணவை எடுத்த பின் மீண்டும் நிமிர்ந்து உட்காருவோம். இந்தத் தொடர்ச்சியான அசைவு, வயிற்றுத் தசைகளை சுருங்கி விரியச் செய்கிறது. இதனால் வயிற்றில் செரிமான அமிலங்கள் சரியான அளவில் சுரந்து, உணவு விரைவாகவும் முழுமையாகவும் செரிமானம் ஆக உதவுகிறது.

ALSO READ | கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?

நரம்புத் தூண்டலும் அளவான உணவும்

சம்மணமிட்டு அமரும் இந்த பத்மாசன நிலை, நமது உடலின் வேகஸ் நரம்பு அமைப்பைத் தூண்டுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, உடலை ஓய்வு மற்றும் செரிமான நிலைக்குக் கொண்டு செல்கிறது.

இதனால், வயிறு நிறைந்த உணர்வை மூளை விரைவாக உணர்கிறது. இதன் விளைவாக, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் பருமன் குறைகிறது.

மூட்டு மற்றும் தண்டுவட ஆரோக்கியம்

தரையில் அமரும்போது முழங்கால், இடுப்பு மற்றும் கணுக்கால் மூட்டுகள் வலுவடைகின்றன. மூட்டுகளுக்கு இடையிலான உயவுத் தன்மை சீராகி, மூட்டு வலிகள் வருவது தடுக்கப்படுகிறது. மேலும், முதுகுத்தண்டு நேராக வைக்கப்படுவதால், உடல் Posture மேம்பட்டு முதுகுவலி பிரச்சனைகள் குறைகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், தரையில் அமர்ந்து உண்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், செரிமான அமைப்பையும் இயற்கையாகவே வலுப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த அறிவியல் பூர்வமான நடைமுறையாகும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget