(Source: ECI/ABP News/ABP Majha)
Happy Slap Day 2024: அதென்ன ஸ்லாப் டே? இது ஆன்டி-வேலன்டைன்ஸ்- வீக்! தெரிஞ்சிக்கோங்க
Happy Slap Day 2024: அதென்ன ‘Anti- Valentine's Week'? என்பது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
காதலர் தினம் (பிப்ரவரி,14) முடிந்துவிட்டது. சிலருக்கு எல்லா நாளும் காதலர் தினம்தான். காதலர் தினம் மாதம், காதலர் தினத்திற்கு முன்பே ஒரு வார கொண்டாட்டம். இதெல்லாம் முடிஞ்சதும் அடுத்த நாளே 'Slap Day'.
காதலர் தினம் முடிந்ததும் அடுத்த வாரம் ‘Anti- Valentine's Week'. அதில் முதல் நாள் ‘ஸ்லாப் டே’ (பிப்ரவரி,15.)
இந்த வாரம் பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 21 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், பிப்ரவரி 15 முதல் கிக் டே, பெர்ஃபியூம் டே, ஸ்லாப் டே, மற்றும் பல தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஸ்லாப் டேவிற்கான வரலாறு என்றெல்லாம் ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும், இது முக்கியத்துவம் வாய்ந்த நாளாக சொல்லப்படுகிறது. டாக்ஸிக் உறவுமுறையினால் பாதிக்கப்பட்டவர்கள், காதல் பிரிவின் வலியில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் கொண்டாட்டப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஸ்லாப் டே என்பது முன்னாள் காதலர்களை தேடி சென்று கண்ணத்தில் அறைய வேண்டும் என்பது அர்த்தமில்லை. இன்றைய நாள் காதலில் ஏற்பட்ட கசப்பான நினைவுகளை, அதனால் கிடைத்த எதிர்மறையான எண்ணங்களை கைவிடுவதற்கான நாள். கடந்து செல்ல முயற்சிப்பது..புதிய அனுபவங்களுக்கும் பயணத்திற்கும் தயாராக முயற்சிப்பது..
ஸ்லாப் டே முக்கியத்துவம்
‘ஸ்லாப் டே’ - எதிர்மறையான எண்ணங்கள், பழங்களை கைவிடுவதன் மூலம் மட்டுமே நல்லவைகள் நம் வாழ்வில் வரும் என்பதே இந்த நாளின் முக்கியத்துவம்..
வாழ்வில் ஏதோ ஒன்றை கடப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள் எனில், நிறைய அன்பை உங்களுக்கு அளிக்க மறக்க வேண்டாம்.
உங்களுக்குப் பிடித்தமானவற்றை கண்டடையுங்கள். புதிய ஹாபி (Hobby) ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள். சின்ன சின்ன மாற்றங்கள் உங்களை மேம்படுத்தும்.
அதோடு, ‘ஸ்லாப் டே’ வை மகிழ்ச்சியுடனும் கொண்டாடலாம். உங்களுக்குப் பிடித்தவர்களை அன்புடன் அடித்துவிட்டு,, ‘ உன் கண்ணத்திற்கு ஹை-ஃபைவ் (High-Five) கொடுக்க விரும்பினேன்’ என்று சொல்லிவிடுங்க..
வாழ்க்கையில் ஜெயிப்பது, தோற்பது என்பதெல்லாம் இல்லை. போலவே காதலிலும் அதேதான்.. காதலித்தவரோடு நீண்ட காலம் பயணிக்க முடியாமல் கூட போகலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், காதல் பிரிவிற்கு காரணம் நாம் தான் என ஒருவர் தன்னையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிட கூடாது. காதலில் துளிர்த்தலும் உதிர்தலும் இயல்பே என்பதை உணர்த்தும் வாரம் இது.. இந்த வாரத்தின் முழு விவரம்.
பிப்ரவரி 16, - கிக் டே (Kick Day)
முன்னாள் காதலர் மூலம் உருவான நெகட்டிவிட்டி, கெட்ட எண்ணங்கள் அணைத்தயும் கிக் செய்து நாளே இந்த நாள். விரட்ட வேண்டும். காதலித்தவரை திருமணம் செய்ய முடியாமல் போனால், அதற்கு காரணம் நாந்தான் என்று நினைப்பவர்கள் அதை கைவிட வேண்டும். சிலருக்கு அவர்கள் அளித்த பரிசு மனதை தொந்தரவு செய்யலாம். அப்படியிருக்கையில், அவர்கள் தந்த பரிசுகளோ, அவர்களுக்கு தர வைத்திருந்த பரிசுகளோ இருந்தால் கூடுதலாக அதையும் எடுத்து வைத்து உதைத்து விளையாடலாம். உங்கள் மன நிம்மதியை எதெல்லாம் கெடுக்கிறதோ அதை விட்டொழியுங்கள்.
பிப்ரவரி 17, - பெர்ஃபியும் தினம் (Perfume Day)
உங்களுக்கு பிடித்த வாசத்தில் ஒரு பெர்ஃபியும் வாங்கி பயன்படுத்தலாம். செல்ஃப் லவ். மற்றவர்களுக்கு வழங்கும் அன்பு, காதலைவிட ஒருவர் தன்மீது அளவுகடந்த காதலுடன் இருக்க வேண்டும்.
பிப்ரவரி 18, - ஃப்ளேர்டிங்க் தினம் (Flirting Day)
உங்களுக்கு க்ரெஷ் யாரென .. உங்களை நீங்கள் அப்சர்வ் செய்து பாருங்கள். டேட் செல்ல முயற்சிக்கல்லாம். டேட்டிங் அழைப்பு வந்திருந்தால் அதை ஏற்கலாம். உங்களுக்கென்று ப்ரத்யேக சம்பவங்கள் விஷயங்கள் இருக்கும் அதன் மூலம், கிரியேட்டிவாக யோசித்து செயல்படவும். உங்களுக்கான பிக்கப் லைன்களை நீங்களே யோசிங்க..
பிப்ரவரி 19, - உறுதி மொழி தினம் (Confession Day)
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக நாள். உங்களுக்குப் பிடித்தவர்களிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.
பிப்ரவரி 20, - மிஸ்ஸிங் தினம் (Missing Day)
பொருள்படும்படியாகவே இருக்கிறது. இன்றைய நாளில் நீங்கள் யாரை மிகவும் மோசமாக மிஸ் செய்கிறீர்களோ அவர்களிடம் அதை வெளிப்படுத்தலாம். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், உங்கள் நண்பராக, உங்கள் குடும்ப உறுப்பினராக, காதலராக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். (முன்னாள் காதலர்கள் இல்லை..)
பிப்ரவரி 21, - பிரேக்கப் தினம் (Breakup Day)
காதல் வாழ்வு உங்களை மகிழ்வாக இல்லை. மிகவும் டாக்சிக்காக இருக்கிறது; இதற்கு மேல் முடியாது. தீர்வே கிடைக்காது என நிலமை இருந்தால், மன அமைதியை பாதிக்கிறது எனில், பிரெக்கப் செய்து விடுங்கள். பிரெக்கப் என்பது தவறானது இல்லை என்பதை உணர்த்தவே இந்த நாள்..