Google Doodle: பானி பூரியை கொண்டாடும் கூகுள் டூடுல்; என்ன காரணம்? பானி பூரி கேம் விளையாடலாம் வாங்க!
Google Doodle:மிகவும் பிரபலமான பானி பூரியை கொண்டாடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது.
மிகவும் பிரபலமான பானி பூரியை கொண்டாடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘பானி பூனி கேம்’ அனைவரையும் ஈர்த்துள்ளது.
‘பானி பூனி’- யாருக்குத்தான் பிடிக்காது இந்த ஸ்நாக். மழை நேரத்தில் கொரிக்க, ரசித்து சாப்பிடலாம். எந்த நேரத்திற்கும் பெஸ்ட் ஸ்நாக்காக பெரும்பாலானவர்களின் தேர்வாக இருப்பது பானி பூரி. மொறுமொறு குட்டி பூரியில், வேக வைத்த தானியங்கள், உருளைக்கிழங்கு கலவையுடன் மசாலா தண்ணீரில் டிப் செய்து வாயில்போட்டு சாப்பிட்டால்... அதன் சுவையே தனி.
ஒருகாலத்தில் வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. பிறகு இந்தியா முழுவதும் அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டது. பானி பூரியை சிறப்பித்து கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. சரி, இன்றைய நாளில் கூகுள் பானி பூரியை கொண்டாட காரணம் என்று பார்க்கலாம்.
பானி பூரி
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரி ஜாய்கா என்ற உணவகம் 2015-ஆம் ஆண்டு இதே நாளில் ( ஜூலை மாதம் 12-ஆம் தேதி) 51 வகை பானி பூரி செய்து உலக சாதனை படைத்தது. அது நடந்து எட்டாண்டுகள் நிறைவை நினைவுகூர்வதுபோல் இன்று கூகுள் பானிபூர் டூடுல் வெளியிட்டுள்ளது. பானி பூரி கொண்டாடுவதன் காரணம் குறித்து கூகுள் தனது வலைப்பக்கத்தில் விவரித்துள்ளது. புச்க்கா, குப் - சுப், கோல் கப்பா போன்ற பெயர்களில் பானி பூரி அழைக்கப்படுகிறது. இது தெற்காசிய சாலையோர உணவு.
பானி பூரி - கூகுள் கேம்
கூகுள் வலைதளத்தில் கூகுள் டூடுளை கிளிக் செய்தால் அது ஒரு புதிய விண்டோவிற்கு அழைத்து செல்லும். ஒரு சாலையோர பானிபூரி வியாபாரிக்கு ஆர்டரைப் பெற உதவுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஃப்ளேவர்கள், அளவுகளை தேர்வு செய்து கொடுத்து அதற்கான ஸ்கோரை பெறலாம். இது ‘ரிலாக்ஸ்’ அதாவது டைமர் இல்லாமல், டைமர் இரண்டு பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ளது. டைமர் பிரிவில் வாடிக்கையாளர்களை காத்திருக்க வைக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் ஆர்டரை கொடுக்க வேண்டும்.
https://g.co/doodle/23ebuxc- என்ற லிங்கை க்ளிக் செய்து நீங்களும் பானி பூரி விற்பனை செய்யும் வீடியோ கேம் விளையாடலாம்.