மேலும் அறிய

சமையலறையே பியூட்டி பார்லர்தான்.. முகப்பொலிவுக்கு எல்லாமே அங்கிருக்கு.. சில டிப்ஸ்!!

சமையலறைப் பொருட்களைக் கொண்டும் முகப்பொலிவு பெறலாம். எப்படி எனக் கேட்பவர்களுக்காகவே இந்தச் செய்தி.

சமையலறைப் பொருட்களைக் கொண்டும் முகப்பொலிவு பெறலாம். எப்படி எனக் கேட்பவர்களுக்காகவே இந்தச் செய்தி. சமையலறையில் உள்ள தக்காளி தொடங்கி எலுமிச்சை, வெள்ளரி, உருளை, பீட்ரூட், கேரட், பூண்டு என எல்லாமே முகப்பொலிவைத் தரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள் அப்புறம் சொல்வீர்கள். எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான டிப்ஸ் இதோ..

தக்காளி:
தக்காளியில் அதிகளவில் வைட்டமின் சி உள்ளது. இது சற்றே அசிடிக் அதாவது காரத் தன்மை கொண்டது. அதனால் இது ஸ்கின் டோனை சரி செய்து, முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும்.

எலுமிச்சை:

எலுமிச்சம்பழம் என்பது வலுவான ப்ளீச்சிங் ஏஜன்ட். எலுமிச்சை சாறை முகத்தில் அப்படியேவும் தேய்க்கலாம். அல்லது எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து தேய்க்கலாம். இது முகத்துக்கு புத்துணர்வு பொலிவைத் தரும். எலுமிச்சையை இரண்டாக வெட்டி. ஒரு பாதியில் சில துளி தேன் ஊற்றி அதை அப்படியே முகத்தில் வைத்து ஸ்க்ரப்பர் போல் பயன்படுத்திப் பாருங்கள் அட்டகாசமான பலன் கிடைக்கும்.

சமையலறையே பியூட்டி பார்லர்தான்.. முகப்பொலிவுக்கு எல்லாமே அங்கிருக்கு.. சில டிப்ஸ்!!

வெள்ளரி...
ப்யூட்டி பார்லரில் ஃபேசியல் செய்யும்போது கண்களில் வெள்ளரி வைத்திருப்பார்கள் பார்த்திருப்போம். கண்களின் கீழ் பை போன்ற வீக்கம் சிலருக்கு உருவாகும். பஃபி ஐஸ் எனப்படும் இந்த பிரச்சினைக்கு கண்களில் வெள்ளரித் துண்டுகளை வைத்தல் நல்ல பலன் தரும். ஐயோ என் ஸ்கின் ரொம்ப சென்சிடிவ் என்பவர்கள் கூட வெள்ளரியை தயங்காமல் பயன்படுத்தலாம்.

உருளைக் கிழங்கு..
உருளைக் கிழங்கில் பல்வேறு தாதுக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றும். உருளைக்கிழங்குகள் முகத்துக்கு மினுமினுப்பான பொலிவைத் தரும்.

பீட் ரூட்..
பீட்ரூட் முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இயற்கையாகவே ஒருவித பிங்க் நிற பொலிவு கிடைக்கும். க்ளியர் ஸ்கின் விரும்புவோர் பீட்ரூட் சாறு எடுத்து முகத்தில் தடவி வரலாம்.

கேரட்..
கேரட் வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. கேரட்டை கரும்புள்ளிகள், முக்கைச் சுற்றி வரும் ப்ளாக்ஹெட்ஸ் ஆகியனவற்றை அப்புறப்படுத்த பயன்படுத்தலாம். கேரட் சாறு முகத்தை ஜொலிக்க வைக்கும்.

சமையலறையே பியூட்டி பார்லர்தான்.. முகப்பொலிவுக்கு எல்லாமே அங்கிருக்கு.. சில டிப்ஸ்!!

பூண்டு..
மேலே சொன்னதெல்லாம் ஓகே பூண்டு என்ன செய்யும் என நினைக்கிறீர்களா..? பூண்டுக்கு கரும்புள்ளிகளை அகற்றுவதில் அதி அற்புதமான சக்தி உண்டு. மேலும் பூண்டு தோலை ரேடிக்கல்ஸிடமிருந்து காக்கும். யுவி எனப்படும் புற ஊதா கதிர்களில் இருந்தும் காக்கும்.

அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் ஏராளமாகக் குவிந்துவிட்டன. விதவிதமான பிராண்ட்கள் வந்துவிட்டன. ஆனாலும் ஹெர்பல் ப்ராடட்க்ஸுக்கு ஒரு மவுசு இருக்கு. அதையும் விட பெரிய செலவில்லாமல் வீட்டிலேயே மேற்கொள்ளக் கூடிய ப்யூட்டி டிப்ஸ் தான் மேலே உள்ளவை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget