மேலும் அறிய

Kidney Health | ’ஹெல்த்தான கிட்னி நீண்ட ஆயுளுக்கு வழி’ - சிறுநீரக ஆரோக்கியத்துக்கு உகந்த காய்கறி, பழங்கள்!

கிட்னியின் ஆரோக்கியத்திற்கு சில பழங்கள், காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக்கொள்வது மிக நல்லது.

நம் உடலுக்குள் உள்ள பாகங்கள் தான் நம்மை இயக்குகின்றன. நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்தாக இருப்பது தான் உள்ளுறுப்புகளுக்கு பலத்தையும், ஆயுளையும் தருகிறது. வயதானாலும் உள்ளுறுப்பு ஆரோக்கியமாக இருந்தால் வாழும் காலமும் அதிகரிக்கும். அந்த வகையில் மிக முக்கியமான உள்ளுறுப்புதான் சிறுநீரகம். கிட்னி என்று சொல்லப்படும் சிறுநீரகம் மனிதர்களின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. உணவில் இருந்து தேவையற்ற கழிவுகளை பிரிப்பதும், அதை வெளியேற்றுவதும் கிட்னியின் வேலை. அதன் வேலையில் சற்று தொய்வு ஏற்பட்டால் ரத்தத்தில் கழிவுகள்  கலந்து உடல்பாகங்கள்பாதிக்கப்படும். கிட்னியின் ஆரோக்கியத்திற்கு சில பழங்கள், காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக்கொள்வது மிக நல்லது.

1.ஆப்பிள்
ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டியதில்லை என்பார்கள். அவ்வளவு ஊட்டச்சத்து ஆப்பிளில் உள்ளது.குறிப்பாக கிட்னியின் ஆரோக்கியத்துக்கு ஆப்பிள் பக்கபலமாக இருக்கிறது. ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்து கிட்னி பாதிக்கப்படுவதை தடுக்கிறது.

Kidney  Health | ’ஹெல்த்தான கிட்னி நீண்ட ஆயுளுக்கு வழி’ - சிறுநீரக ஆரோக்கியத்துக்கு உகந்த காய்கறி, பழங்கள்!

2.பெர்ரி:
ஊட்டச்சத்தை சீராக வழங்குவதில் பெர்ரி பழங்கள் முக்கியமானவை. பெர்ரி வகைகளில் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி,க்ரான்பெர்ரி என   பல வகையான பழங்கள் உள்ளன. அனைத்துமே கிட்னி ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது.

3.கிச்சிலி வகை
உங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் விட்டமின் சி தான் மிக முக்கியம். கிச்சிலி வகை பழங்கள் என சொல்லக்கூடிய எலுமிச்சை,  நார்த்தை, ஆரஞ்சு வகை பழங்களில் விட்டமின் சி அதிகம். அந்த வகையான பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  தினமும் லெமன் டீ குடிப்பது, லெமன் கலந்த தண்ணீர் குடிப்பது கிட்னிக்கு மிக நல்லது. கிட்னியில் கல் சேரும் பிரச்னைக்கு எலுமிச்சை நல்ல தீர்வு

4.முட்டைகோஸ்:
முட்டைகோஸ் சோடியம் அளவை  குறைக்க உதவும் முக்கியமான காய்கறி. இது கிட்னியின் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது.  மேலும் முட்டைகோஸில் விட்டமின்ஸ், மற்ற சத்துகள் அதிகம் அடங்கியுள்ளன. முட்டைகோஸில் இருந்து முழுமையான ஊட்டச்சத்தை பெற வேண்டுமென்றால் அரைவேக்காட்டுடன் உண்ண வேண்டும்.

Kidney  Health | ’ஹெல்த்தான கிட்னி நீண்ட ஆயுளுக்கு வழி’ - சிறுநீரக ஆரோக்கியத்துக்கு உகந்த காய்கறி, பழங்கள்!

5.சர்க்கரைவள்ளிக் கிழங்கு:
சீனிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு உள்ளிட்டபெயர்களில் அழைக்கப்படும் கிழங்கு வகை கிட்னிக்கு மிக மிக நல்லது. ஊட்டச்சத்து அதிகம் உள்ள சர்க்கரைவள்ளி  கிழங்கை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். கிழங்கில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.

6.பரட்டைக்கீரை:
சத்து நிறைந்த உணவுப்பட்டியலை எடுத்தால் கேல் எனப்படும் பரட்டைக்கீரை அதில் இடம்பிடிக்கும். முட்டைக்கோஸ், காளிபிளவர் வகையைச் சேர்ந்த பரட்டைக்கீரையில் நுண்சத்துகளும், விட்டமின்களும் ஏராளம்.  கீரைகளில் ராணி என்றும் அழைக்கப்படும் கேல், கிட்னியின் ஆரோக்கியத்தும் அதிக பலனை கொடுக்கக்கூடியது. 

7.காளிப்ளவர்:
கேல், முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த காள்ப்ளவர் சிறுநீரகத்துக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய உணவு. நுண்சத்துகளும், விட்டமினும் காளிப்ளவரில் அதிகம் உள்ளது. வேகவைக்கப்பட்ட காளிப்ளவர் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கற்பூரவல்லி இலைகள் : மருத்துவ பயன்கள் என்ன? எப்படி பயன்படுத்தலாம்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget