World Chocolate Day 2022 : இன்னைக்கு சாக்லேட் டே.. உங்க வீட்டுல இருக்குற இந்த பொருட்களே போதும்.. சாக்லெட் தித்திக்கும்
ஜூலை 7 ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச சாக்லேட் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சாக்லேட் என்றால் யாருக்கு பிடிக்காமல் போகும்? சாக்லேட் பிரியர்களே! இன்று சர்வதேச சாக்லேட் தினம். வாழ்வின் மறக்க முடியாத தருணங்களை கொண்டாட நாம் சாக்லேட் கொடுப்போம் இல்லையா? இந்த சிறப்பு தினத்தை கொண்டாட சாக்லேட் வைத்து வீட்டிலேயே பல வகையான ருசியான உணவுகளை தயாரித்து சாப்பிடலாம்.
வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடிய சாக்லேட் டெசர்ட்ஸ்:
Chocolate Brownie Sundae
சாக்லேட் பிரவுனி எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். பால், கிரீம், பால் பவுடர், முட்டை, சர்க்கரை, நட்ஸ் ஆகிய அத்யாவசிய பொருட்கள் வைத்தே வீட்டில் பிரவுனியை எளிதாக பிரவுனி செய்யலாம். பிரவுனியுடன் ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் உங்கள் நாவின் வசம்..!
Bitter Chocolate, Caramelised Walnut Parfait
டார்க் சாக்லேட் என்பவை கொஞ்சம் கசப்பாகதான் இருக்கும் ஆனாலும் உடலுக்கு தேவையான ஆண்டிஆக்சிடண்ட்ஸ் உள்ளன. இந்த டார்க் சாக்லேட் வைத்து ஒரு இனிப்பு வகை செய்யலாம். டார்க் சாக்லேட் , ப்ரஷ் கிரீம், சாக்லேட் ஐஸ் கிரீம் ஆகியவைகளுடன் வால்நட் சேர்த்தால் டாப் டக்கருதான்.!
Chocolate mousse
சாக்லேட் மூஸ் கேக் என்பது மிகவும் சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். விப்பிங் கிரீம், சாக்லேட், வென்னிலா எசன்ஸ், கோகோ பவுடர் இருந்தால் போதும். எளிதாக இருந்தாலும் இதன் சுவையோ அலாதியானது.
Classic chocolate cake
பிறந்தநாள் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கு சாக்லேட் கேக்குகளையே பலரும் விரும்புவர். இவ்வளவு ஏன் அதிகம் விற்றுபோகும் பிளாக் ஃபாரெஸ்ட் கேக்குகளும் சாக்லெட் சுவையை அடிப்படையாக கொண்டு பேக் செய்யப்படும் கேக் ஆகும். ப்ளெயின் சாக்லெட் கேக்குகளை பால் அல்லது காஃபியுடன் சாப்பிடலாம்.
Chocolate mud pie
பை வகைகளின் சுவை வழக்கமான இனிப்பு பண்டங்களிலிருந்து சற்று வேறுபடும். இதில் பிஸ்கெட் போன்ற பேஸ் இருப்பதனால் சாப்பிடுவதற்கு மொறு மொறுவென இருக்கும். சாக்லேட் க்ரீம், சாக்லேட் கஸ்டர்டு, சாக்லேட் கனாச் மற்றும் ஓரியோ பிஸ்கெட் இருந்தால் சாக்லெட் மட் பை செய்து விடலாம்.
Chocolate soufflé
பிரான்சை பூர்வீகமாக கொண்ட இந்த சாக்லேட் டிஷ் வகையில், அதிக அளவிலான சாக்லேட் சேர்க்கப்படும். முட்டையின் வெள்ளை கரு மற்றும் கெட்டியான சாக்லேட் பேஸ் இதன் பிரதானமான பொருட்கள் ஆகும். இதை ஒருமுறை சாப்பிட்டுத்தான் பாருங்களேன்....சாப்பிட்டால் பாரீஸ் நகரத்து போகமலே அவ்வூரை சுற்றி பார்த்த அனுபவத்தை பெறுவீங்க..