News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Coffee and Quantity: ஒருநாளைக்கு இத்தனை கப் காபியா? உஷார்.. : காபி பிரியர்கள் கவனத்திற்கு!

மோச்சாவாக இருந்தாலும் சரி ஃபில்டர் காபியானாலும் சரி, ஒரு ஆரோக்கியமான கப் காபி உங்கள் மனநிலையை உயர்த்தும் ஆற்றல் கொண்டது.

FOLLOW US: 
Share:

நீங்கள் காபி குடிப்பவரா? சூரியன் உதிக்கும் காலை வேளையில் சூடான கப் காபியுடன் ரிலாக்ஸாக அமர யாருக்குத்தான் பிடிக்காது. அது எஸ்பிரெஸோ அல்லது மோச்சாவாக இருந்தாலும் சரி ஃபில்டர் காபியானாலும் சரி, ஒரு ஆரோக்கியமான கப் காபி உங்கள் மனநிலையை உயர்த்தும் ஆற்றல் கொண்டது. ஆனால் காபியில் சில பக்கவிளைவுகளும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதிகப்படியான கெஃபைன் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காபியை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் இதோ

இருதய நோய் (Cardio vascular diseases)

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் Australia Centre for Precision Health ஆய்வின்படி, ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கப் எஸ்பிரெசோவைக் குடிப்பவர்களுக்கு அவர்களுடைய இரத்தத்தில் உள்ள லிப்பிட்களின் (கொழுப்பு) எண்ணிக்கையை பாதித்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து ஆபத்தை அதிகரிக்கும். இது இருதய நோய் உண்டாக்கும். மேலும், சமீபத்திய ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 3-5 கப் காபியை உட்கொண்ட பிறகு, பெண்களை விட ஆண்களில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

கவலை (Anxiety)

Anxiety என்பது ஒருவகையான கவலைமிகுந்த அடர் மனநிலை. எஸ்பிரெசோவை அதிகமாக உட்கொள்வது நுகர்வோரில் நடுக்கத்தையும், கவலையையும் ஏற்படுத்தலாம், இவை பொதுவாக பதட்டத்தின் அறிகுறிகளாகும். சிலருக்கு, காபி ஆற்றலை அதிகரிக்கும், ஆனால் இந்த  Anxiety அவதிப்படுபவர்கள், இரண்டாவது கோப்பையை எடுத்துக்கொள்வதற்கு முன் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

ஹார்மோன் மாற்றம்

அதிகப்படியான காஃபின் மனித உடலை அதிக விழிப்புடன் வைக்கலாம் மற்றும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு மாறுவது பெண்களுக்கு ஆபத்தானது.

தூக்கமின்மை

நமக்கு தூக்கம் வரும்போதெல்லாம், காபிக்கு நம்மை எழுப்பும் சக்தி உள்ளது, ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது தேவையான தூக்கத்தைப் பெறுவதை கடினமாக்கும். ஆனால் காபியில் குறைந்த அல்லது மிதமான அளவு காஃபின் நுகர்வோரின் தூக்க சுழற்சியை பாதிக்காது.

முன்னதாக, ஒரு நாளைக்கு ஐந்து கப் காபி வரை குடிப்பது பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது என்று நிரூபிக்கும் ஆய்வுகள் உள்ளன. ஆனால் இப்போது அது குடிக்கும் வரம்பு பற்றி நிறைய கேள்விகளை எழுப்புகிறது. காபி ஆரோக்கியமான பானமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், மேலும் தேநீர், காபி அல்லது மதுபானமாக இருக்கும் எந்தவொரு பானத்தையும் மிதமாக உட்கொள்ள வேண்டும் என்பதே எப்போதும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

Published at : 28 May 2022 06:29 AM (IST) Tags: Tea coffee caffeine

தொடர்புடைய செய்திகள்

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

டாப் நியூஸ்

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!