Karonda : தவிர்க்கக்கூடாத காய் கலாக்காய்.. அற்புதமான பயன்கள் என்னென்ன?
கரோண்டா என்றும் விஞ்ஞான ரீதியாக கரிசா காரண்டாஸ் என்றும் அழைக்கப்படும் கலாக்காய், புளிப்பு மற்றும் அமிலத் தன்மைகள் கொண்ட பெர்ரி அளவிலான பழமாகும்.
![Karonda : தவிர்க்கக்கூடாத காய் கலாக்காய்.. அற்புதமான பயன்கள் என்னென்ன? why we should add karonda in our diet food Karonda : தவிர்க்கக்கூடாத காய் கலாக்காய்.. அற்புதமான பயன்கள் என்னென்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/22/5a2ee44726a03f16023ea1dde6fa0691_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கலர்ஃபுல்லான பழங்கள் நிறைந்த டயட் ப்ளேட் தான் துரித உணவுகள் நிறைந்த இன்றைய நவீன உலகில் சிறப்பான உணவு.
அதிலும் எந்த ஒரு பழத்தையும் தவிர்க்காமல் நம் அன்றாட வாழ்வில் அனைத்தையும் உட்கொள்வது இன்னும் சிறப்பான ஒன்று. ஆனால் எளிதில் கிடைப்பவை தொடங்கி அரிதான பழங்கள் வரை நாம் நமக்கே தெரியாமல் நம் அன்றாட வாழ்வில் சில பழங்களைத் தவிர்த்து வருகிறோம். அவற்றில் முதல் வரிசையில் உள்ளது கலாக்காய்.
கரோண்டா
கரோண்டா என்றும் விஞ்ஞான ரீதியாக கரிசா காரண்டாஸ் என்றும் அழைக்கப்படும் கலாக்காய், புளிப்பு மற்றும் அமிலத் தன்மைகள் கொண்ட பெர்ரி அளவிலான பழமாகும். இந்தப் பழங்கள் இந்தியாவில் பொதுவாக ஊறுகாய்களில் சேர்க்கப்படுகின்றன.
இந்நிலையில், கலாக்காயை தவிர்க்காமல் சாப்பிடுவதை ஏன் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா கூறியவை பின்வருமாறு:
கலாக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
செரிமான அமைப்பின் செயல்பாட்டை கலாக்காய் மேம்படுத்துகிறது.
கலாக்காயில் உள்ள பெக்டின் எனும் ஸ்டார்ச் செரிமானத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
View this post on Instagram
மன ஆரோக்கியம்
தவிர கலாக்காய் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கலாக்காயில் உள்ள வைட்டமின்கள், டிரிப்டோபன் உடன் மெக்னீசியமும் இருப்பதால், ஒட்டுமொத்த மன நலனையும் மேம்படுத்தும் வகையில் செயல்படும் செரோடோனின் உற்பத்தியையும் தூண்டுகிறது.
தவிர, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்த்தொற்றுகள் அல்லது காயத்தால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கவும் இப்பழங்கள் உதவுகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)