(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: சூடான நெய் பருப்பு.. கூடவே கொஞ்சம் நெருப்பு.. வைரலாகி ஹிட்டாகும் ரோட்டு கடை வீடியோ
அந்த உணவு எரிவதினால், புகை வாசத்தை பெறுகிறது. சுட்ட வாசம் சில உணவுகளில் சேரும்போது அசாத்திய சுவையை தரும்...
உணவுக்கு கீழ் நெருப்பு வைத்து சமைப்பது இயல்பு, ஆனால் இங்கு ஒரு உணவின் மேலே நெருப்பு எரியவிட்டு சமைப்பது வைரல் ஆகி வருகிறது.
பருப்பு தாளிப்பு
தால் என்றழைக்கப்படும் துவரம் பருப்பு வட இந்தியர்கள் பலரின் விருப்பமான உணவாக உள்ளது. பல மாநிலங்களில் இது பிரதான உணவாக இருந்து வருகிறது. இதில் செய்யப்படும் ஒவ்வொரு உணவும் எல்லோராலும் ரசிக்கப்படுகிறது. குறிப்பாக நெய் பருப்பு சோறு போன்ற உணவுகள் பற்றி பேசினாலே உருகும் ஆட்கள் உள்ளனர். என்ன சாப்பிடுவது என்று தெரியாத போதெல்லாம் பலருக்கும் அங்கு பதிலாக வந்து நிற்பது நெய் பருப்புதான் என்கின்றனர். அதனாலேயே அதைக் கொண்டு செய்யப்படும் வித்தியாசமான உணவுகள் பெரிதும் மக்களை கவர்கின்றன. சாலையோரங்களில் அதற்கென கூட்டம் கூடுகின்றன. அப்படி நாம் சிந்திக்காத அளவுக்கு வித்தியாசமான ஒரு பருப்பு உணவு ஹரித்வார் பகுதியில் மிகவும் பேமஸ் என்கிறார்கள்.
View this post on Instagram
எரியும் நெய் பருப்பு தாளிப்பு
உணவு சாப்பிட்டு நாக்கு எரிவது சகஜம், ஆனால் அந்த உணவே கொழுந்துவிட்டு எரிவதுதான் இந்த உணவின் ஸ்பெஷல். ஒரு இலை மீது, பருப்பை வைத்து அதனுடன், கடலை மற்றும் தேவையான பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கிளறுகிறார். பின்னர் அப்படியே அந்த இலை மீதுள்ள பருப்பின் மீது, அடுப்பில் இருந்து தீயை எடுத்து குழம்பு போல ஊற்றுகிறார். அந்த கரண்டியில் முன்னரே சிறிது நெய்யை எடுத்துக் கொண்டதால் அந்த தீ நெய்யோடு சேர்ந்து தட்டிற்கு செல்கிறது. பின்னர் அந்த உணவு கொழுந்துவிட்டு எரிகிறது. அதனை அணைத்துவிட்டு சாப்பிடத் தருகிறார்.
புகை ஃப்ளேவர் தரும் ட்ரிக்
இது வெறும் சாகசமாக மட்டுமல்லாமல், அந்த உணவு எரிவதினால் கிடைக்கும் புகை வாசத்தை பெறுகிறது. சுட்ட வாசம் சில உணவுகளில் சேரும்போது அசாத்திய சுவையை தரும். அந்த அனுபவத்தை வழங்குவதற்காக அவர் அந்த உணவை நெருப்பால் எரிக்கிறார். பலருக்கும் அவர் செய்யும் அந்த செயல்முறை பிடித்துப் போகிறது. அதனால் அந்த கடையில் எந்நேரமும் கூட்டம் இருக்கும் என்று கமெண்டில் பலர் தெரிவிக்கின்றனர். பலரும் இந்த உணவைக் கண்டு வியந்து, அதனை சாப்பிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர்.
View this post on Instagram
தோசை மீது நெருப்பு
ஆனால் சிலர் உன்னிப்பாக அந்த வீடியோவை கவனித்துவிட்டனர். உன்னிப்பாக கவனித்த பலர் அந்த உணவு தயாரிப்பவர் கையில் ஏற்பட்டுள்ள காயத்தை பார்த்துவிட்டனர். இதனால் பலரும் அந்த காயம் இது போன்று சாகசம் செய்யும்போது ஏற்பட்டிருக்கும் என்று சொல்கிறார்கள். இதுபோன்று உணவின் மீது நெருப்பு வைத்து சமைக்கும் வீடியோ ஏற்கனவே ஒன்று வைரல் ஆகி இருந்தது. தோசை மீது தக்காளி, வெங்காயம், தேங்காய் சட்னி மற்றும் பல பொருட்களை போட்டு, அதன் மீது சீஸ் சேர்த்து அதனை எரிய விட்டு தரும் வீடியோ வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.