Medu vada | சும்மா தெரிஞ்சுக்கோங்க: இந்த நேரத்தில் உளுந்து வடை உண்பதால் இத்தனை நன்மைகளா? இனி வடை போச்சேன்னு சொல்லாதீங்க...!
Medu vada | சும்மா தெரிஞ்சுக்கோங்க: மாலையை ‛வாத காலம்’ என்கிறார்கள். காலையிலிருந்து பணியாற்றுவதால் உடல் ரொம்ப அசதியாக இருக்கும்.
வடை போச்சே... என் கிண்டல் செய்வதை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால்... வடை ஒரு விதமான மருந்து என்கிறார்கள். என்னடா இது... புதுசா இருக்கேன்னு தோணும்... ஆனால், வடை பின்னால், ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. வடையில் பல வகைகள் உள்ளது. ஆனால், வடை என்றால் அது உளுந்து வடை தான்.
வடை இல்லாத உணவு நிரக்காது என்பார்கள். ஆட்டிய உளுந்தை, மெல்லமாய் இலையில் தட்டி, நடுவே விரல் ஓட்டையிட்டு, கொதிக்கும் எண்ணெய்யில் நீந்த விட்டு, அள்ளி அணைத்தால்... எச்சில் ஊறும். டீக்கடைகளில் டீ இருக்கிறதோ இல்லையோ... பெட்டி பெட்டியாக வடை இருக்கிறது. உண்மையில் வடை தான் நாம் அதிகம் உண்ணும் உணவு. சமீபத்தில் பிரியாணியை அதிகம் விரும்பி உண்கிறார்கள் என்ற தரவு வந்தது. அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அதை கடந்து, அதை விட அதிகம் உண்ணப்படும் உணவு வடை தான்.
சைவ, அசைவத்திற்கு அப்பாற்பட்டு உளுந்து வடைக்கு இல்லாத ரசிகர்களே கிடையாது. காலையில் மூச்சு முட்டு வாக்கிங் செல்பவர்கள் கூட , கொளுப்பை குறைத்துவிட்டதாக நினைத்து சுட்டு குவிக்கப்பட்டிருக்கும் வடையை ஒரு கை பார்ப்பார்கள். வடை உண்பது வரை பிரச்சனை இல்லை. ஆனால், அது சுத்தமான உளுந்தாக இருக்க வேண்டும்; தரமான எண்ணெய்யில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சரி இப்போ விசயத்திற்கு வருவோம்...
நம் பாரம்பரிய உணவாக, நம் விருந்துகளில் இடம் பெறும் உளுந்து வடைக்கு பெரிய அங்கீகாரம் தருகிறது ஆயுர்வேதம் . அதற்கு காரணமும் இருக்கிறது. உளுந்துக்கு நிறைய பயன்கள் இருக்கிறது. அதை வடையாக தயாரிக்கும் போது, அதில் கலக்கப்படும் மிளகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கொந்தமல்லி போன்றவை இயற்கையாகவே மருத்துவ குணம் கொண்டவை. உளுந்தோடு இவை சேர்க்கும் போது எளிதில் உணவு ஜீரணம் ஆகும் . உளுந்து வடையை மாலை நேரத்தில் உண்பது நல்ல பலனளிக்கும் என்கிறார்கள். மாலையில் தான் உடலில் அதிக வாதம் இருக்கும் என்கிறது ஆயுர்வேதம். அதனால் தான் மாலையை ‛வாத காலம்’ என்கிறார்கள். காலையிலிருந்து பணியாற்றுவதால் உடல் ரொம்ப அசதியாக இருக்கும்.
அந்த நேரத்தில் உடலுக்கு தொம்பூட்டும் உணவை உட்கொள்ள தோன்றும், அதற்கு சரியான தேர்வு உளுந்து வடை மட்டுமே. காரணம் உளுந்தின் மருந்துவ குணம். வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்பு வலி, எலும்புத் தேய்மானம் போன்வற்றிக்கு உளுந்து நல்ல பலன் தரும் என்பதால், உளுந்து வடை தான் மாலை சிற்றுண்டுக்கு சரியான தேர்வு. முன்பு சொன்னது தான், வடை எவ்வளவு நல்லதோ.... அதே அளவு அதற்கு பயன்படுத்தப்படும் மாவும், எண்ணெய்யும் நல்லதாக இருக்க வேண்டும். அது இல்லாத வரை பிரச்சனை தான்.
ஆனால் அதே உளுந்து சில நோய் பிரச்சனைகள் இருப்பவர்கள் தொடக்கூடாது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனை, மூக்கில் நீர் வடிதல், ஜலதோஷம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருப்பவர்கள் வடையை உண்ணக்கூடாது என்கிறது ஆயுர்வேதம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )