கொழுக்கட்டை பிடிக்குமா? ஒருமுறை இப்படி செய்து பாருங்க! சூப்பரா இருக்கும்!
டேஸ்டியான கொழுக்கட்டை எப்படி எளிமையாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
கொழுக்கட்டை சுவையாக, எளிமையாக செய்யக்கூடிய ரெசிபி. இதை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும். இவை வெல்லம் சேர்த்து செய்வதால் உடலுக்கு நல்லது. நெய், முந்திரி, தேங்காய்த்துருவல் உள்ளிட்டவற்றை சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றது. மழை நேரத்தில் இந்த கொழுக்கட்டையை செய்து சாப்பிடலாம். வாங்க எப்படி சுவையான கொழுக்கட்டை செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
வெல்லம் - ஒன்றரை கப்
மைதா - கால் கப்
ஏலக்காய்த் தூள் - அரை ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் – அரை கப்
தூள் முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, நெய் சூடானவுடன், ரவையை ஓரிரு நிமிடம் கருகாமல் வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஆறியவுடன் அதை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் முழுமையாக உருகும் வரை காய்ச்சி, வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் பொடித்த ரவை, நறுக்கிய முந்திரி, மைதா, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், உப்பு, சிறிது எண்ணெய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை 25-ல் இருந்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கைகளால் உருண்டை பிடிக்க வேண்டும்.
பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லிப் பானையில் வைத்து 15 நிமிடம் வேக விட்டு எடுத்து பரிமாற வேண்டும். கொழுக்கட்டை போலவும் பிடித்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான கொழுக்கட்டை தயார்.
மேலும் படிக்க: