மேலும் அறிய
Advertisement
Saamai Pulao: தினமும் ஒரு சிறுதானியத்தை உணவுல சேர்த்துக்கோங்க.. சாமை புலாவ் ரெசிப்பி இதோ..
சுவையான சாமை புலாவ் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க..
தினசரி ஒரு வேளை சாமையை உணவாக எடுக்கலாம். இது எல்லா வயதினருக்கும் ஏற்றவை. சுலபமாக ஜீரணிக்க கூடியவை. சிறிதளவு எடுத்துகொண்டாலும் வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதை சோறாக மட்டும் அல்லாமல் சாமை புட்டு, சாமை ரொட்டி, சாமை பிஸ்கட், சாமை பொங்கல், சாமை உப்புமா என்று விதவிதமாக சமைக்கலாம்.
சாமையில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது. இது நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதோடு எளிய சர்க்கரை கொண்ட கார்போஹைட்ரேட் உணவும் கூட. இதில் வைட்டமின் பி, வைட்டமின் பி 6, ஃபோலிக் அமிலம் டிரிப்டோபென் ஆகியவை உள்ளன.
தேவையானபொருட்கள்
- 2 கப் அரிசி
- 4 கப்தண்ணீர்
- 1 நெய்
- சீரகம்
- பச்சை மிளகாய், நறுக்கியது
- கல் உப்பு
- வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு
- வேர்க்கடலை, நறுக்கியது
- புதிய கொத்தமல்லி இலைகள், அழகுபடுத்த, பொடியாக நறுக்கியது
செய்முறை
1. முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சாமை அரிசியை நன்கு கழுவி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.ஒரு பாத்திரத்தில், மிதமான தீயில் நெய்யை சூடாக்கவும். அதில் சீரகம் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
3.கழுவிய சாமை அரிசியைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கி விட வேண்டும். நெய்யுடன் அரிசி நன்றாக கலக்குமாறு கிளறி விட வேண்டும்.
4.தண்ணீரை ஊற்றி, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும். கொதித்ததும், தீயை குறைத்து, கடாயை மூடி, சுமார் 15-20 நிமிடங்கள் லேசாக கொதி வர விட வேண்டும். இப்போது சாதம் தண்ணீர் வற்றி நன்று வெந்து வரும்.
5. இப்போது, வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கிய வேர்க்கடலையை இதனுடன் சேர்த்து மெதுவாக கிளறி விட வேண்டும். இந்த புலாவை மேலும் சில நிமிடங்கள் லேசான தீயில் வேக விட்டு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
6. அவ்வளவுதான் சுவையான சாமை புலாவ் தயார். இதை கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறலாம்.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion