News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

உருளைக்கிழங்கு பிடித்தும் சாப்பிட முடியலையா, பயமா இருக்கா? : இனி கவலையை விடுங்க..

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கப் அளவு உருளைக்கிழங்கையோ அல்லது அதன் குடும்ப வகையான சர்க்கரைக்கிழங்கைச் சாப்பிடுவதோ தீங்கு விளைவிப்பதில்லை

FOLLOW US: 
Share:

உருளைக்கிழங்கு இல்லாத சமையலைப் பார்ப்பதே அரிது. ஆனால் குறைந்த கார்ப் உணவுகளை விரும்புவதால் மக்கள் பெரும்பாலும் மிகவும் பிடித்த இந்தக் கிழங்குகளை உட்கொள்வதைத் தவிர்க்கிறார்கள்.வயதனாவர்கள் கிழங்கு வகைகள் ஏற்படுத்தும் வாயுப் பிரச்னையின் காரணமாக இதைத் தவிர்க்கிறார்கள்.

ஆனால் அண்மையில் வெளியான ஒரு ஆய்வின்படி உருளைக்கிழங்கு அப்படியொன்றும் ஆபத்தான காய்கறி இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் இதழின் ஆராய்ச்சியாளர்கள், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கப் அளவு உருளைக்கிழங்கையோ அல்லது அதன் குடும்ப வகையான சர்க்கரைக்கிழங்கைச் சாப்பிடுவதோ தீங்கு விளைவிப்பதில்லை என்பதை வெளிப்படுத்தியது. மேலும் உருளைக்கிழங்கு வறுக்கப்பட்டதா இல்லையா என்பது அதை உட்கொள்வதில் முக்கியமல்ல எனக் குறிப்பிட்டுள்ளது

30 வயதுக்கு மேற்பட்ட 2,523 பேரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் டிஸ்லிபிடெமியா போன்ற உடல்நலக் குறைபாடுகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. உருளைக்கிழங்கை உட்கொண்ட நபர்கள் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வாளர்கள் ரெட் மீட் எனப்படும் மட்டன் மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகளுக்கு மாற்றாக இந்த உண்ணக்கூடிய கிழங்குகளை வைத்திருந்தனர். உருளைக்கிழங்கை சாப்பிட்டவர்களை கவனித்ததில் கூடுதலாக, அவர்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தனர். இதன் விளைவாக, அவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 24 சதவிகிதம் குறைவாகவும், உயர்த்தப்பட்ட ட்ரைகிளிசரைடுகள் 26 சதவிகிதம் குறைவாகவும் இருந்தன.

இந்த ஆண்டு செப்டம்பரில் ஆராய்ச்சி வெளியிடப்பட்டாலும், ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகாலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் 1971ம் ஆண்டு முதல் பங்கேற்பாளர்களில் 70 சதவிகிதம் பேரின் பழைய தரவுகளை சேகரித்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த ஆய்வைத் தொடர்ந்தனர்.

ஆய்வின்படி, பங்கேற்பாளர்கள் சுமார் 36 சதவிகிதம் பேர் பேக்கிங் செய்த உருளைக்கிழங்கை சாப்பிட்டனர், 20 சதவிகிதம் பேர் வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டனர், 14  சதவிகிதம் பேர் மசித்த உருளைக்கிழங்கை உட்கொண்டனர் மற்றும் 9 சதவிகிதம் பேர் அவர்கள் அதை வேகவைத்து சாப்பிட்டார்கள்.

இதைப் படித்ததும் உங்கள் உணவில் உருளைக்கிழங்கை மீண்டும் சேர்க்கத் தயாரானால் அந்த உணவைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய சில நன்மைகள் இங்கே உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது உருளைக்கிழங்கு என்பது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர்ந்த ட்ரைகிளிசரைடுகளின் அபாயத்தை அதிகரிக்காத பதப்படுத்தப்படாத உணவு என்கின்றனர் அவர்கள். மேலும், உருளைக்கிழங்கு ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். மேலும் அவை செல் அளவில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும் உதவுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். 

Published at : 07 Nov 2022 05:04 PM (IST) Tags: Diabetes Diet blood pressure Nutrition Potato Triglycerides

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்

Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்

AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்

AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்

TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?

Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?