Rava Ladoo: பத்தே நிமிடத்தில் ரவா லட்டு ரெடி! 2023-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ரெசிபி இதுதான்!
Rava Laddu Recipe: எப்போதும் பூந்தி லட்டை மட்டும் செய்யாமல் அவ்வபோது மிகவும் எளிமையாக வீட்டில் வைத்திருக்கும் ரவையை கொண்டே ரவா லட்டு செய்யலாம். இப்படியும் ட்ரை பண்ணி பாருங்க
Rava Laddu Recipe in Tamil: எதிர்பாராமல் வீட்டிற்கு விருந்தினர் வந்தாலோ, யாருக்காவது பிறந்தநாள் என்றாலோ எளிதாக குறுகிய நேரத்தில் தயார் செய்ய முடிவது ரவா கேசரி. சிலருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ரவா கேசரிக்கும் இடம் உண்டு. இதில் வெனிலா, பைனாபிள் உள்ளிட்ட எசன்ஸ் சேர்த்து செய்வதுண்டு. போலவே, ரவா லட்டும் எளிதாக பத்து நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.
ரவா லட்டு செய்முறை
என்னென்ன தேவை?
ரவா - 1/2 கிலோ
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - ஒரு பெரிய கப்
முந்திரி - ஒரு கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை
பாதம், கருப்பு திராட்ச்சை என எதுவாக இருப்பினும் உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்து கொள்ளலாம்.
ஒரு கடாயில் மிதமான தீயில் நெய் சேர்த்து முந்திரி, உலர்ந்த பழங்களை வெறுத்தெடுக்க வேண்டும்.அதை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதே கடாயில், சிறிதளவு நெய் சேர்த்து ரவையை 2 அல்லது 3 நிமிடம் வறுக்க வேண்டும். நிறம் மாறாமல் ரவையை வறுக்க வேண்டும். அப்போதான் லட்டு சுவையாக இருக்கும். ரவையை வறுத்து தனியே வைக்கவும்.
இனிப்பு சுவைக்காக, சர்க்கரையை மிக்சியில் பொடியாக அரைத்து வைக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்தில் சர்க்கரை பாகு காய்ச்சியெடுக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை, முந்திரி சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்து லட்டு போல பிடிக்கவும். இதில் சிறிதளவு பால் சேர்த்து கலவை சூடாக இருக்கும்போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும். இப்போது சுவையான ரவா லட்டு ரெடி. பால் சேர்த்தால் அதிக நாட்களுக்கு லட்டு இருக்காது. சர்க்கரை பாகு முறை என்றால் சிறிதளவு ரவாவில் ஊற்றி லட்டுக்களாக பிடிக்கவும்.
பல வகை ரவா லட்டு ரெசிபி
- ரவா லட்டு விரும்பி சாப்பிடுபவர்கள் என்றால் பல வகையானவற்றை முயற்சி செய்யலாம்.
- ரவா லட்டு தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதிலாக மில்க்-மெய்ட் (MILKMAID) சேர்க்கலாம்.
- ரவா லட்டில் உடைத்த பாதாம், பால் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.
- சாக்கோ பவுடர், சாக்கோ சிப்ஸ் சேர்த்து சாக்லேட் ரவா லட்டு தயாரிக்கலாம்.
- ஹெல்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கேழ்வரகு, கம்பு மாவு சிறதளவு சேர்த்து கொள்ளலாம்.
- இதோடு வறுத்த பூசணி விதை, சூரியகாந்தி விதைகள் சிறிதளவு பொடித்து சேர்க்கலாம்.
- பேரீட்ச்சை பழம் சிறியதாக நறுக்கி சேர்த்து ரவா லட்டு செய்யலாம்.
- ரெண்டு நாட்களுக்கு பயன்படுத்திவிடுவீர்கள் என்றால் பால் சேர்க்கலாம். உடனே சாப்பிட்டுவிடும் சூழலில் மட்டும் பால் சேர்த்து ரவா லட்டு தயாரிக்கவும்.
ரவா இனிப்பு பணியாரம்
என்னென்ன தேவை?
ரவா - ஒரு கப்
மைதா / கோதுமை மாவு - ஒரு கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
நெய் சிறதளவு
செய்முறை
ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் அதில் மைதா, சர்க்கரையையும் கலந்து ஒரு திக்கான மாவு கலவையாக இருக்கவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரவை மைதா கலந்து வைத்துள்ள கலவையை ஒரு குழியான ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து ப்ரௌன் நிறம் வந்ததும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும். பணியார சட்டியிலும் நெய் சேர்த்து ரவா பனியாரம் தயாரிக்கலாம். இதில் கார பணியாரமும் செய்யலாம். பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து செய்யலாம்.