Plantain Podimas: சைவப் பிரியர்களே! வாழைக்காயில் ஒரு முறை பொடி மாஸ் செஞ்சு அசத்துங்க!
சுவையான வாழைக்காய் பொடிமாஸ் எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1
பச்சை மிளகாய் - 2
உளுந்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கடுகு - 1/4டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் 2 சிட்டிகை
சின்ன வெங்காயம் - 8
தேங்காய் துருவல் - 3டீஸ்பூன்
உப்பு தேவையானஅளவு
செய்முறை
1 வாழைக்காயை 2 ஆக வெட்டி தண்ணீரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாழைக்காய் வெந்தவுடன் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த வாழைக்காயுடன் சிறிது உப்பு மற்றும் 3 டீஸ்பூன் தேங்காய் சேர்த்து கலந்து விட வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
உளுந்தம் பருப்பு பொன்னிறமானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதனுடன் சிறிது உப்பு சேர்த்து, துருவிய வாழைக்காய் கலவையை சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு, 2-3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் பொடி மாஸ் தயார்.