மேலும் அறிய

Mushroom Pulao: சுவையான காளான் புலாவ் ரெசிபி! இதோ

Mushroom Pulao: காளான் புலாவ் செய்வது எப்படி என்பதை காணலாம்.

காளானில் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. தேங்காய் பால் சேர்த்து புலாவ் செய்தால் சுவையாக இருக்கும். காளான் புலாவ் செய்முறை எப்படி என்று காணலாம்.

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப்

காளான் - 1/2 கி

வெங்காயம் -இரண்டு

தேங்காய் பால் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 2 

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

நிலக்கடலை / முந்திரி - ஒரு டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

செய்முறை:

தேங்காய் பால் எடுத்து தனியே வைக்கவும். தேங்காய் பால் திக்காக இருந்தால் நல்லது.  பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதா எடுக்க வேண்டும்.

மிதமான தீயில் அடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெய் (நெய், தேங்காய் எண்ணெய் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்.) ஊற்றி சூடாகியதும் அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, முந்திரி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போடவும். முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். முந்திரியை சிறிதளவு அரைத்தும் இதோடு சேர்க்க தனி சுவை கிடைக்கும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே அதன் நிறம் மாறும். அப்போது அரிசி, சிறிய துண்டுகளாக நறுக்கிய காளான் சேர்க்கவும்.காளானை பெரிய அளவிலான துண்டுகளாக நறுக்கலாம். இல்லையெனில், முழு காளானை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சேர்க்கலாம். காளான் அளவில் ரொம்ப பெரிதாக இருந்தால் ஒன்று இரண்டாக நறுக்கி சேர்க்கலாம்.  இப்போது அரிசிக்கு தேவையான அளவு தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றவும். மூன்று விசில் விட்டு இறக்கினால் சுவையான காளான் புலாவ் தயார்.

இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வெண்டைக்காய் ரோஸ்ட் என உங்களுக்கு விருப்பமானதை உடன் வைத்து சாப்பிட தேர்வு செய்யலாம். 

எடை குறைப்புக்கு காளான் உதவுமா?

எடை குறைப்பு பயணத்தில் இருக்கும்போது காளான் நல்லதா என்று கேட்டால் - ஆம். இது சிறந்த தேர்வு. காளான்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், வயிற்றை நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்க உதவும். அளவுக்கு அதிகமாக சாப்பிட விடாமல் தடுக்கும்.நார்ச்சத்து உணவு குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.அது சரி, பொதுவாக சீன உணவுகளை நாம் ஆரோக்கியமற்றதாக கருதுவதால், இந்த உணவு எப்படி ஆரோக்கியமானது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். எதையுமே ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும். அதிக எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

 


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
ISRO Sivan:
"2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கால் பதிப்பார்கள்" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
"அம்பேத்கரை அவமானப்படுத்திட்டாங்க.. இந்த இடஒதுக்கீட்டை ஏத்துக்க மாட்டோம்" அமித் ஷா அதிரடி
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
Embed widget