மேலும் அறிய

Maggie Recipes: சீஸ் இல்லாமல் சுவையான க்ரீமி மேகி செய்ய முடியுமா? இதோ ரெசிபி!

Maggie Recipes: மேகி ப்ரியர்களே..உங்களுக்கான ருசியான மேகி ரெசிபிகள் இதோ!

எதாவது டேஸ்டியாக சாப்பிட வேண்டும்; அதுவும் இரண்டு நிமிடங்களில்.. அதேதான்.. மேகி. எல்லாருக்கும் மேகி மிகவும் பிடித்த உணவாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதுவும் மழைநாளில் சுட சுட ஒரு கப் மேகி என்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள். சீஸ் மேகி, வெஜ் மேகி, முட்டை மேகி, இறைச்சி சேர்த்த மேகி, பஞ்சாபி தட்கா மேகி, சைனீஸ் ஸ்டைல் மேகி என பல்வேறு வகையான மேகி வகைகள் எல்லோராலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீஸ் இல்லாமல் மேகி செய்ய முடியுமா என்றால்.. இதோ அதற்கான ரெசிபி இருக்கு பாருங்க.

சீஸ் இல்லாமல் க்ரீமி மேகி

என்னென்ன தேவை

மேகி - 2 பாக்கெட்

பால் - ஒரு லிட்டர்

எண்ணெய் / நெய்/ வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி அரை அளவு வரும்படி காய்ச்சவும். அடுப்பில் மிதமான தீயில் கடாய் ஒன்றை வைத்து அதில் அரை லிட்டர் பால், மேகியை சேர்க்கவும். மேகி பாலில் நன்றாக வேகவிடவும். 5 நிமிடங்களில் மேகி வெந்து க்ரீமியாக கிடைக்கும். அப்போது இதில் மேகி மசாலாவை சேர்த்து கிளறி இறக்கினால் சீஸ் இல்லாத க்ரீமி மேகி ரெடி. நொடிகளில் சுவையான மில்க் மேகி எளிதாக செய்துவிடலாம். ட்ரை பண்ணி பாருங்க. 

தேங்காய் பால் மேகி

என்னென்ன தேவை?

மேகி பாக்கெட் - 1

தேங்காய் பால் - ஒரு கப்

வெண்ணெய் - ஒரு ஸ்பூன்

செய்முறை:

அரை தேங்காய் மூடியில் பால் எடுத்துகொள்ளவும். அடுப்பில் மிதமான சூட்டில் கடாயை வைத்து சூடானதும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ஒரு டம்பளர் தேங்காய் பால் ஊற்றி மேகியை சேர்க்கவும். தேங்காய் பாலில் மேகி நன்றாக வெந்ததும் அதில் மேகி பவுடரை கொட்டி சிறிது நேரம் நன்றாக கிளறவும். 5 நிமிடங்களுக்குள் மேகி ரெடியாகிவிடும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம். சுவையான தேங்காய் பால் மேகி தயார். இதை வழக்கமாக மேகி செய்யும் முறையிலும் செய்யலாம். ஆனால், அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் மேகி வெந்ததும் முதல் நிலை தேங்காய் பால்  சேர்த்தால் அவ்ளோதான் சுவையாக இருக்கும்.

குறிப்பு:  இதை காலையில் வெறும் வயிற்றில், மாலை போன்ற நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கலாம். சிலருக்கு அதிகமாக தேங்காய் பால் / தேங்காய் எண்ணெய் சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தலைசுற்றல், குமட்டல் கூட இருக்கலாம். அதனால் பகல் நேரத்தில் சாப்பிடுவது நல்லது. 

மேகி பேல் 

பலருக்கும் பேல் பூரி என்ற ஸ்நாக்ஸ் பிடிக்கும். மேகியில் பேல் செய்து பாருங்களேன்.

என்னென்ன தேவை?

மேகி நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு ஸ்பூன்

வறுத்த நிலக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - தேவையான அளவு

சாட் மசாலா - 1 ஸ்பூன்

மேகி மிக்ஸ் - ஒரு பாக்கெட்

தேன் - ஒரு ஸ்பூன்

ஓமப்பொடி - 2 டேபிள் ஸ்பூன்

மாதுளை - ஒரு கப்

செய்முறை:

மேகியை நொறுக்கி அதில் சிறிதளவு உப்பு, கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கலக்கவும். கடாயில் எண்ணெய் வைத்து மிதமான தீயில் மேகி கலவையை வைத்து பொரித்து எடுக்கவும். தேவையெனில் பொரித்தெடுப்பதற்கும் முன்பாக மேகி பவுடரை சேர்த்து பொரிக்கலாம். 

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், நிலக்கடலை, சாட் மசாலா, பொரித்த மேகி, மேகி மசாலா,தேன், எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். கடைசியாக, ஓமப்பொடி, மாதுளை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்தால் மேகி பேல் ரெடி. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget