Food: செம டேஸ்டான பீட்ரூட் ஊத்தாப்பம்..! சிம்பிளா சமைப்பது எப்படி?
தென் இந்திய உணவு என்றால் இட்லி, தோசை, இடியாப்பம் அப்புறம் தோசைகளில் வெரைட்டி தான் பேமஸ். அந்த வெரைட்டி தோசைகளில் ஒன்றுதான் ஊத்தப்பம்.
தென் இந்திய உணவு என்றால் இட்லி, தோசை, இடியாப்பம் அப்புறம் தோசைகளில் வெரைட்டி தான் பேமஸ். அந்த வெரைட்டி தோசைகளில் ஒன்றுதான் ஊத்தப்பம். ஊத்தாப்பம் என்றவுடனே வடிவேலு காமெடி நினைவுக்கு வராமல் இருக்காது. அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்று சர்வர் சொல்லும் அந்தக் காட்சியில் வரும் ஊத்தாப்பம் ஒரு ரகம் என்றால் ப்ளைன் ஊத்தாப்பம், ஆனியன் ஊத்தாப்பம், கேரட் ஊத்தாப்பம், பீட்ரூட் ஊத்தாப்பம் என பல வெரைட்டி உண்டு. அதில் நாம் இன்று பார்க்கப்போவது பீட்ரூட் ஊத்தாப்பம்.
அதென்னங்க பெருசு.. ஊத்தாப்பத்தை ஊத்தி மேல கொஞ்சம் பீட்ரூட்டை துருவிப்போட விடியதுதானே எனக் கேட்டீர்கள் என்றால் அப்படியல்ல. மாவிலேயே பீட்ரூட் சாற்றை சேர்த்துச் செய்ய வேண்டும். மாவு மீந்துபோய்விட்டால் புளித்துவிட்டால் பீட்ரூட் ஊத்தப்பம் ஒரு நல்ல ரெஸிபி.
1. ஒரு துருவிய பீட்ரூட். சிறிய துண்டு இஞ்சி. கொஞ்சம் தேங்காய் துருவல் ஆகியன சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதை கெட்டியான மாவில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
2. ஒரு தோசை தவாவை சூடேற்றி. அதன் மீது எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி கொஞ்சம் மொந்தையாக வார்க்கவும்.
3. தோசையின் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியனவற்றை சேர்க்கவும்.
4. சுற்றிலும் விருப்பத்திற்கு ஏற்ப எண்ணெய்யோ நெய்யோ சேர்க்கவும். பின்னர் தோசையை மூடிவைத்து வேகவிடவும். 2 நிமிடங்களில் மீண்டும் இன்னொருபுறம் திருப்பிப் போட்டு வேகவைக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சமைக்கவும்.
5. ஊத்தாப்பத்தின் மீது சில மல்லி இலைகளை தூவிவிட்டு தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால். காலை உணவு முழுமையானதாக அமையும்.
இதே மாவைக் கொண்டு பீட்ரூட் இட்லியும் ஊற்றலாம். பீட்ரூட், கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் இந்த வண்ண வண்ண இட்லி தோசையை நிச்சயம் புறக்கணிக்க மாட்டார்கள்.
பீட்ரூட் நன்மைகள்:
பீட்ரூட் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
பீட்ரூட் எடை குறைக்க உதவுகிறது
பொட்டாசியம் அளவை பராமரிக்க உதவுகிறது
பீட்ரூட் உடல் முழுவதும் அழற்சியை (Inflammation) எதிர்த்துப் போராடுகிறது
இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
கூடவே இந்த பீட்ரூட் ஜூஸ் ரெஸிபியையும் ட்ரை பண்ணிப்பாருங்க..
View this post on Instagram