News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Millet Pumpkin Dosa : உடல் எடை குறைக்கணுமா? சாமை - பூசணிக்காய் தோசை சாப்பிடுங்க.. செய்முறை இதோ...

Saamai - Poosanikkai Dosa : சுவையான சாமை-பூசணிக்காய் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

தேவையான பொருட்கள்

சாமை அரிசி – 1 டம்ளர்
இட்லி அரிசி – 1 டம்ளர் 
உளுத்தம் பருப்பு – 1/4 டம்ளர்
வர மிளகாய் – 7 
சின்ன வெங்காயம் – 10
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

முதலில் இட்லி அரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின் உளுந்தையும் கழுவி அதையும் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சாமை அரிசியை கழுவி சுத்தம் செய்து அதையும் அலசி  தண்ணீர் ஊற்றி சுமார் 5 மணிநேரம் வரை ஊறவைக்க வேண்டும். 

பின்னர் பூசணிக்காயின் தோல் நீக்கி விட்டு, துருவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் தனியாக வைத்துகொள்ள வேண்டும். 

அடுப்பில் கடாய் வைத்து,சிறிது எண்ணெய் சேர்த்து, சூடானதும், வர மிளகாய், துருவிய பூசணிக்காய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். 

அவை நன்றாக வதங்கிய பின் ஊற வைத்த அரிசி, உளுந்து ஆகியவற்றை தண்ணீர் வடித்து விட்டு, ஒரு மிக்சி ஜாரில் அல்லது கிரைண்டரில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.  கிட்டத்தட்ட 7 முதல் 8 மணிநேரம் வரை இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும். 

இந்த மாவை தோசைக்கல்லில் நாம் வழக்கமாக தோசை சுடுவது போன்று சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான சாமை -பூசணிக்காய் தோசை தயார். இதை கார சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லாது சாம்பாருடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். 

சாமை பயன்கள் 

சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்க உதவலாம். சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. மலச்சிக்கலை போக்க வல்லது. நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும்.  இது மட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. சாமையில் உள்ள இயற்கையான சுண்ணாம்புச் சத்து  எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல பலனளிக்க உதவும். எலும்புகளுக்கு ஊட்டமளிக்க சாமை உதவும்.

மேலும் படிக்க 

Adani Hindenburg Case: அதானி - ஹிண்டன்பெர்க் விவகாரம்: SEBI அமைப்பே விசாரிக்கும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த முக்கிய தகவல்!

Assam Accident: அதிகாலையில் கோர சம்பவம் - பேருந்தும் லாரியும் மோதி விபத்து, அசாமில் 14 பேர் பலி

Published at : 03 Jan 2024 11:54 AM (IST) Tags: little millet pumpkin dosa healthy dosa millet dosa recipe

தொடர்புடைய செய்திகள்

Summer Veg Pasta Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க;பாஸ்தா இப்படி செய்து பாருங்க!

Summer Veg Pasta Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க;பாஸ்தா இப்படி செய்து பாருங்க!

Mango Phirni: ஸ்வீட் க்ரேவிங்ஸ் - இதோ மாம்பழ பிர்னி செய்து சாப்பிடுங்க! ரெசிபி!

Mango Phirni: ஸ்வீட் க்ரேவிங்ஸ் - இதோ மாம்பழ பிர்னி செய்து சாப்பிடுங்க! ரெசிபி!

Corn Cheese Pasta:பாஸ்தா பிரியரா? இப்படி செய்து பாருங்க - ஸ்வீட்கார்ன் மட்டும் போதும்!

Corn Cheese Pasta:பாஸ்தா பிரியரா? இப்படி செய்து பாருங்க - ஸ்வீட்கார்ன் மட்டும் போதும்!

Cheese Veg Sticks: மாலைநேர ஸ்நாக்ஸிற்கு நல்ல ஆப்ஷன் - சீஸ் வெஜ் ஸ்டிக்ஸ் ரெசிபி இதோ!

Cheese Veg Sticks: மாலைநேர ஸ்நாக்ஸிற்கு நல்ல ஆப்ஷன் - சீஸ் வெஜ் ஸ்டிக்ஸ் ரெசிபி இதோ!

Aval laddu: ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆப்சன் - சிவப்பு அவல் லட்டு - ரெசிபி இதோ!

Aval laddu: ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆப்சன் - சிவப்பு அவல் லட்டு - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

Indian 2 Audio Launch: இன்றைய சூழலில் வரும் இந்தியன் தாத்தா.. கமல் காட்சிகளில் அனல் பறக்கும்.. ஷங்கர் தந்த அப்டேட்!

Indian 2 Audio Launch: இன்றைய சூழலில் வரும் இந்தியன் தாத்தா.. கமல் காட்சிகளில் அனல் பறக்கும்.. ஷங்கர் தந்த அப்டேட்!

Bobby Simha: பாய்ஸ் படத்தில் நிறைவேறாத ஆசை இப்போ நிறைவேறி இருக்கு.. இந்தியன் 2 விழாவில் பாபி சிம்ஹா உருக்கம்!

Bobby Simha: பாய்ஸ் படத்தில் நிறைவேறாத ஆசை இப்போ நிறைவேறி இருக்கு.. இந்தியன் 2 விழாவில் பாபி சிம்ஹா உருக்கம்!

உடல்நலக் குறைவால் இறந்த டேங்க் ஆபரேட்டர் மனைவிக்கு வேலை வேண்டும் - ஒன்று சேர்ந்த பணியாளர்கள்

உடல்நலக் குறைவால் இறந்த டேங்க் ஆபரேட்டர் மனைவிக்கு வேலை வேண்டும் - ஒன்று சேர்ந்த பணியாளர்கள்

T20 World Cup: 17 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத யுவராஜ் சிங்கின் சாதனை - இந்த டி20 உலகக்கோப்பையில் முறியடிக்கப்படுமா?

T20 World Cup: 17 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத யுவராஜ் சிங்கின் சாதனை - இந்த டி20 உலகக்கோப்பையில்  முறியடிக்கப்படுமா?