வெள்ளை சட்டையில் உள்ள இங்க் கறை நீங்க.. ஃப்ரிட்ஜில் வாடை வராமலிருக்க டிப்ஸ்!
வெள்ளை சட்டையில் இங்க் கரை நீங்கவும், குளிர்சாதனப் பெட்டியில் கெட்ட வாடை வராமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சட்டையில் இங்க் கறை நீங்க
பள்ளி செல்லும் மாணவர்களின் ஷர்ட் பாக்கெட்டுகளில் இங்க் கறைகள் படிந்திருக்கும். இதை ப்ரெஷ் கொண்டு எவ்வளவு தேய்த்தாலும் முழுவதுமாக கறை போகாது. வீட்டில் உள்ள காலாவதியான தேவையில்லாத மாத்திரையை வைத்து இந்த இங்க் கரையை எளிதில் நீக்கலாம். சட்டையில் இங்க் கறை உள்ள இடத்தை மட்டும் தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கப்பில் சிறிதளவு தண்ணீர் எடுத்து ஒன்று அல்லது இரண்டு மாத்திரையை தண்ணீரில் நனைத்து அதை இங்க் கரையின் மீது தேய்க்கவும். ஒரு நிமிடம் தேய்த்துக் கொடுத்து பின் இதை தண்ணீரில் அலசவும். இப்போது 50 சதவீதம் கறை நீங்கி இருக்கும்.
மீண்டும் இதே முறையில் கறை உள்ள இடத்தில் மாத்திரையால் தேய்த்து அலசவும். வேண்டுமென்றால் நீங்கள் மாத்திரையை தூள் செய்தும் அதைக் கொண்டும் கறை மீது தேய்த்து அலசலாம். இப்படி செய்வதன் மூலம் சட்டையில் உள்ள இங்க் கறை முழுவதுமாக நீங்கி விடும்.
குளிர்சாதனப் பெட்டியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க..
நம் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் பல்வேறு வகையான பொருட்களை வைத்திருப்போம். எனவே ஃப்ரிட்ஜை திறக்கும் போது ஒரு மாதிரியான கெட்ட வாடை வரும். இதை தவிர்க்க, ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் அரிசி சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் அல்லது உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கலந்து விட்டு. காற்றும் புகும் அளவிற்கு உள்ள ஒரு துணியால் டப்பாவின் வாய் பகுதியை மூடி ரப்பர் பேண்ட் போட்டுக்கொள்ள வேண்டும். அல்லது கயிறுகொண்டு கட்டிக்கொள்ள வேண்டும். இதை ஃப்ரிட்ஜிக்குள் வைத்து விட்டால், நீங்கள் ஃப்ரிட்ஜை திறக்கும் போதெல்லாம் நல்ல வாசம் வரும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம்.
உப்பு தண்ணீர் விடாமல் இருக்க
நாம் ஸ்டோர் செய்து வைத்துள்ள உப்பு சில நாட்களில் தண்ணீர் விட்டு விடும். மற்றும் ஒரு மாதிரியான வாடை வரும். இதை தவிர்க்க உப்பு வைத்திருக்கும் டப்பாவிற்குள் மூன்று வர மிளகாயை சேர்த்து வைத்து விட வேண்டும். வர மிளகாய் லேசாக உப்பினுள் புதைந்தது போன்று இருக்க வேண்டும். இப்படி வைத்தால், உப்பு தண்ணீர் விடாமல் நீண்ட நாள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
மேலும் படிக்க
வீட்டில் எறும்பு வராமலிருக்க! தண்ணீர் கேனில் துர்நாற்றம் வீசாமல் இருக்க! இதை மட்டும் பண்ணுங்க
ஒரு ரூபாய் செலவில்லாத சூப்பர் ஏசி! பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் இதோ!