Krishna Jayanthi 2023 Recipes: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: இப்படி செய்து பாருங்க...சுவை மிகுந்த ரவா லட்டு ரெசிபி!
நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி மிக மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி 2023:
கம்சனை அழிக்க விஷ்ணு எடுத்த கிருஷ்ண அவதாரமே கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi) என்ற பெயரிலும், கோகுலாஷ்டமி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி 6-ந் தேதியான இன்று கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி மிக மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டில் பலகாரங்கள் செய்யப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணெய், அவல், பால், பழங்கள், தயிர், வெல்ல சீடை, கார சீடை போன்றவைகள் நிவேதன் செய்யப்படும். அதில், வெல்ல சீடை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப்
சர்க்கரை - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
முந்திரி உடைத்தது - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி, உலர்ந்த பழங்களை வறுக்க வேண்டும். பின்னர், அதனை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதே கடாயில் ரவையை 2 அல்லது 3 நிமிடம் வறுக்க வேண்டும். நிறம் மாறாமல் ரவையை வறுக்க வேண்டும். இதனை அடுத்து, சர்க்கரையை மிக்சியில் பொடியாக அரைத்து வைக்க வேண்டும். சர்க்கரை அரைத்த பின், வறுத்த ரவையையும் வறுக்க வேண்டும். இதனை அடுத்து, ஒரு பாத்திரத்தில் பொடியாக அரைத்த ரவை, சர்க்கரை, வறுத்த முந்திரி உலர் பழங்கள், தேங்காய், நெய் சேர்த்து கலக்க வேண்டும். கடைசியாக பால் சேர்த்து கலவை சூடாக இருக்கும்போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும். இப்போது சுவையான ரவா லட்டு ரெடி.
அவல் பாயாசம்:
தேவையான பொருட்கள்:
அவல் - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 1
முந்திரி - 5
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை மிதான தீயில் வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதே நெய்யில் அவலை போட்டு நிறம் மாறாமல் வறுக்க வேண்டும். இதுஒரு பக்கம் இருக்க, பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் நன்றாக கொதித்து வரும்போது, வறுத்த அவலை சேர்க்க வேண்டும். அவல் நன்றாக அவியும் வரை வைக்க வேண்டும். அவல் நன்கு வெந்தவுடன் தான் வெல்லம் சேர்க்க வேண்டும். என்னென்றால், வெல்லம் சேர்த்த பின் அவல் வேகாது. இதன்பின், ஒரு கடாயில் 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு சூடு செய்ய வேண்டும். வெல்லம் கரைந்தவுடன், அதனை வடிகட்டி, வேகம் வைத்த அவலில் வெல்ல பாகுவை சேர்க்க வேண்டும். அத்துடன் ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும். வெல்லம் நன்றாக சேர்ந்த பிறகு 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும்.
மேலும் படிக்க
Krishna Jayanthi 2023: கிருஷ்ண ஜெயந்தி எப்போது? கம்சனை வதம் செய்த கண்ணன் தோன்றியது எப்படி?