மேலும் அறிய

Krishna Jayanthi 2023: கிருஷ்ண ஜெயந்தி எப்போது? கம்சனை வதம் செய்த கண்ணன் தோன்றியது எப்படி?

Krishna Jayanthi 2023 Date in Tamilnadu: மகாவிஷ்ணுவின் 9வது அவதாரமான கிருஷ்ண ஜெயந்தி வரும் 6-ந் தேதி கோலாகலமாக தமிழ்நாட்டில் கொண்டாடப்பட உள்ளது.

காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களும் தனித்தனி சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த 10 அவதாரங்களில் ஒவ்வொரு அவதாரமும் தனிச்சிறப்பு வாய்ந்தவை ஆகும். அதில் மிக, மிக சிறப்பு வாய்ந்தது அவர் எடுத்த 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரம் ஆகும்.

கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) எப்போது?

கம்சனை அழிக்க விஷ்ணு எடுத்த கிருஷ்ண அவதாரமே கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) என்ற பெயரிலும், கோகுலாஷ்டமி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி வரும் 6-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி மிக மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி தேய்பிறை அஷ்டமியில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்திக்கான திதி நேரம் 6-ந் தேதி இரவு 9.13 மணி முதல் மறுநாள் ( அதாவது 7-ந் தேதி) இரவு 9.14 வரை உள்ளது.

கிருஷ்ணர் அவதரித்த ரோகிணி நட்சத்திரம் என்பதால், கிருஷ்ண ஜெயந்தியன்று ரோகிணி நட்சத்திரம் மதியம் 3.24க்கு தொடங்கி மறுநாள் மதியம் 3.23க்கு முடிவடைகிறது. கிருஷ்ண ஜெயந்திக்கான திதியும், ரோகிணி நட்சத்திரமும் 7-ந் தேதியும் வந்தாலும் கிருஷ்ண ஜெயந்தியை 6-ந் தேதியே கொண்டாட வேண்டும்.  கிருஷ்ண ஜெயந்தியை மாலை நேரத்தில் கொண்டாடுவது சிறப்பு ஆகும்.

கிருஷ்ணர் அவதரித்த வரலாறு:

பலமிகுந்த அரக்கனான கம்சன் பல அட்டகாசங்களை செய்து கொண்டிருந்தான். அவனது துயரங்கள் தாங்காத பூமாதேவி கம்சனை அழிக்குமாறு பிரம்மாவிடம் முறையிட்டாள். அப்போது, அவர் கிருஷ்ண அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு கம்சனை அழிப்பார் என்று கூறினார். இதன்படி, வசுதேவருக்கும், தேவகிக்கும் 8வது குழந்தையாக பிறந்தார் கிருஷ்ணர்.

அசரிரீ தோன்றி வசுதேவர் - தேவகியின் 8வது குழந்தை கம்சனை அழிக்கும் என்று கூறியதால், கம்சன் வசுதேவர் - தேவகியை சிறைபிடித்து அவருக்கு பிறந்த முதல் 6 குழந்தைகளையும் கொலை செய்தார். 7வதாக பிறந்த குழந்தையை விஷ்ணு தன்னுடைய திருவிளையாடலால் வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியிடம் சேர்த்துவிட்டார். அந்த குழந்தையே பலராமன் ஆவார்.



Krishna Jayanthi 2023: கிருஷ்ண ஜெயந்தி எப்போது? கம்சனை வதம் செய்த கண்ணன் தோன்றியது எப்படி?

கம்சனை அழிப்பதற்காக தேவகி வயிற்றில் கிருஷ்ணர் 8வது குழந்தையாக பிறந்தார். ஆனால், 7வது குழந்தை கலைந்துவிட்டதாக ஏற்கனவே கம்சனை நம்ப வைத்திருந்தனர். ஆவணி மாத வளர்பிறையில் அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் கூடி இந்த நாளில் பிறந்த கிருஷ்ணர், ஆயர்குலத்தில் யசோதையிடம் கண்ணனாக வளர்ந்தார். கண்ணனாக வளர்ந்த கிருஷ்ணரின் லீலைகளும், சேட்டைகளும் எண்ணிலடங்காதவை. பெண்கள் புடைசூழ வலம் வந்த அந்த கோவர்த்தன் தக்க சமயத்தில் கம்சனை வதம் செய்தார்.

கொண்டாட்டம்:

கிருஷ்ண ஜெயந்தியன்று மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அழகு பார்ப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது, மதங்களை கடந்து இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பல மதத்தினரும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு கிருஷ்ண அவதாரமிட்டு அழகு பார்ப்பார்கள். மேலும், கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகளை வீடுகளில் நடக்கவிட்டு அவர்களின் பாதங்களை பதிய வைப்பதால், கிருஷ்ணரே தங்கள் வீட்டிற்கு வருவதாக பக்தர்கள் ஐதீகம் ஆகும்.


Krishna Jayanthi 2023: கிருஷ்ண ஜெயந்தி எப்போது? கம்சனை வதம் செய்த கண்ணன் தோன்றியது எப்படி?

மேலும், பள்ளிகளுக்கும் பல குழந்தைகள் கிருஷ்ண வேடத்தில் செல்வது இயல்பாகும். தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.  வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி மிக கோலாகலமாக கொண்டாடப்படும். பானைகளில் வெண்ணெயை கட்டி உறியடிப்பது போன்ற விளையாட்டுகளும் நடத்தப்படும்.

ALSO READ | September 2023 Festivals: பக்தர்களே... விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி.. செப்டம்பரில் இவ்வளவு பண்டிகையா..?

தலைப்பு செய்திகள்

திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
Embed widget