Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!
Aamras: மாம்பழம் நார்ச்சத்து நிறைந்தது ஆம்ரஸ் செய்வது எப்படி என்று காணலாம்.
மாம்பழம் யாருக்குத்தான் பிடிக்காது. மாம்பழம் வைத்து செய்யப்படும் ஆம்ரஸ் (AaamRas) உலகின் மிகச்சிறந்த ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாம்பழத்தில் செய்யப்படும் உணவுகளில் முதலிடம் பிடித்துள்ளது.
ஆம்ரஸ்:
பிரபலமான உணவு மற்றும் பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனமான TasteAtlas - ஜூன் 2024 ம் ஆண்டு மிகவும் பிரபலமான உணவுகள் இடங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் உலகில் சிறந்த உணவகங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அது குறித்து விசமர்சனம் செய்யும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தில் செய்யப்படும் ஆம்ரஸ் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஆம்ரஸ் இனிப்பிற்கு நல்ல ரேட்டிங்க் கிடைத்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் செய்யப்படும் மாம்பழ ஸ்டிக்கி ரைஸ் 2-வது இடத்திலும் ஃபிலிஃபைன்ஸ் நாட்டில் மாம்பழம் வைத்து செய்யப்படும் ஐஸ்கிரீம் 3-வது இடத்திலும் உள்ளது. மாம்பழத்தில் செய்யப்படும் உணவுகளில் சிறந்த பத்தைப் பட்டியலிட்டுள்ளது. இனிப்பான டிரிங்க் பிரிவில் மேங்கோ லஸ்ஸி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக மேங்கோ லஸ்ஸி ‘ 'Best Dairy Beverage In The World' என்ற பெருமையை பெற்றிருந்தது.
கடந்த ஆண்டுகளில் இந்நிறுவனம் வெளியிட்ட ரேட்டிங்கில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி உலகிலேயே மிகச் சிறந்த அரிசி என்று ரேட்டிங்க் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மசாலா டீ, புதினா டீ, இஞ்சி டீ என பல வகையான டீ இருந்தாலும் அதை அளவோடு அருந்துவதே நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
ஆம்ரஸ் செய்முறை:
ஆம்ரஸ் எளிதாக செய்துவிடலாம். மஹாராஷ்டிரா, புனே உள்ளிட்ட பகுதிகளில் பூரிக்கு ஆம்ரஸ் வைத்து சாப்பிடும் பழக்கம் உண்டு. மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் முயற்சி செய்யலாம். அதுவும் இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்றாலோ மாம்பழம் பிரியர் என்றாலோ ஆம்ரஸ் செய்து சாப்பிடலாம்.
இதைச்செய்ய கனிந்த மாம்பழங்கள், பால், கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை அல்லது தேன், ஏலக்காய் நன்றாக இருக்கும்.
மாம்பழத்தை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கவும். மாம்பழத்தை நன்றாக மசிக்க வேண்டும். அல்ஃபோன்சா மாம்பழம் நல்ல சுவையாக இருக்கும். மிக்ஸியிலும் மாம்பழத்தை அரைத்து எடுக்கலாம். இதில் தேன் சேர்த்து அதோடு திக்கான பால் சேர்த்தால் ஆம்ரஸ் தயார். ஏலக்காய் பொடி, குங்குமப் பூ சேர்க்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.
மாம்பழம் இளநீர் ஷேக்:
இளநீரில் கிடைக்கும் தேங்காய், தண்ணீர் இரண்டையும் எடுத்துக்கொள்ளவும். இதோடு தோல் நீக்கிய நன்கு பழுத்த மாம்பழத்தை துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். இளநீர் தேங்காய், தண்ணீர், மாம்பழம் ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்தால் திக்கான ஷேக் த்யார். இனிப்பு தேவையெனில் கன்டன்ஸ்மில்க், தேன் ஏதாவதை ஒன்றை சேர்க்கலாம். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குடித்தால் கோடைக்கு நன்றாக இருக்கும்.
இதே செய்முறையில் மாம்பழத்துடன் நுங்கு சேர்த்து மில்க்ஷேக் செய்து குடிக்கலாம். ருசியாகவும் இருக்கும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும். இளநீரில் அதிகளவு எலக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளது. வெயிலை சமாளிக்க அல்லது தாகம் எடுக்கும்போது, சோடா அல்லது செயற்கையான குளிர்பானங்களை சாப்பிடுவது நல்லதல்ல. அவற்றில் கலோரி அதிகம். அதோடு சர்க்கரை அளவு மிகவும் அதிகம். ஆனால், இளநீர் குறைந்த கலோரி கொண்டது. இதில் சராசரியாக, 8-அவுன்ஸ் (240-மில்லி லிட்டர்), சுமார் 45-60 கலோரி இருக்கிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றம், ஆற்றல் உற்பத்திக்கு உதவும்.மாம்பழம் நார்ச்சத்து நிறைந்தது. கலோரியும் குறைவும். சத்துமிகுந்த மாம்பழம், இளநீர் ஜூஸ் செய்து குடிப்பது நல்லதுதான்.