Food Tips: நாவிற்கு சுவை சேர்க்கும் காஷ்மீரி சிக்கன் செய்வது எவ்வாறு?
இனிப்பு , புளிப்பு, காரம் என மூன்றும் கலந்த காஷ்மீரி சிக்கன் குழம்பு உண்பதற்கு சற்று வித்தியாசமாகவே இருக்கும்
பொதுவாக எல்லோரது வீடுகளிலுமே அசைவ உணவு என்றால் அன்றைய தினம் சிறுவர் முதல் பெரியவர் வரை ஒரு பிடி சாதம் அதிகப்படியாக வயிற்றுக்குள் இறங்கும் .இந்த அசைவ உணவுகளில் கோழி இறைச்சி எனப்படும் சிக்கனுக்கு ஒரு தனி இடம் உண்டு
இதில் செட்டிநாட்டு கோழி குழம்பு, செட்டிநாட்டு கோழி வறுவல், கோழிக்கறி தொக்கு, சுட்ட கோழி, கடாய் சிக்கன், சில்லி சிக்கன், பெப்பர் சிக்கன்,மின்ட் சிக்கன் மற்றும் கோழிக்கறி சாப்பீஸ் என விதவிதமான உணவு வகைகளை சுவைத்திருப்போம்.
இப்படியாக தமிழக முறையில் கோழிக்கறியை சாப்பிட்டு வந்த நமக்கு, காஷ்மீரி உணவு விதத்தில் கோழிக்கறி செய்து சாப்பிட்டால்,ஒரு புது சுவையாகவே இருக்கும்.அதனை எவ்வாறு செய்வது என்பதை இங்கு காணலாம்.
மிகவும் சுவையான உணவுகளுக்கு தாயகமாக காஷ்மீர் விளங்குகிறது. அந்த வகையில் அங்கு குளிரான காலநிலைக்கு ஏற்ப அதிகளவாக அசைவ உணவுகளே , உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. அங்கு பிரபலமான உணவுகளில் காஷ்மீர் சிக்கன் அங்கு முக்கிய இடத்தை பெற்று பெறுகிறது.
இது காஷ்மீரி சிக்கன் மசாலா என்று அழைக்கப்படுகிறது. இதை செய்வதற்கு,அரை கிலோ துண்டாக நறுக்கப்பட்ட கோழி இறைச்சியை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 200 கிராம் முந்திரி பயிறு எடுத்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 200 கிராம் திராட்சையை நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக செய்து கொள்ளவும்.
தேவையான அளவு வெங்காயம் எடுத்து,சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.இரண்டு தக்காளிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இஞ்சி பூண்டு விழுது தயார் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து, கோழியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு கொத்தமல்லி ,கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது சீரகத்தூள், தனியாத்தூள் ,சிறிது மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் என அனைத்தையும் நன்றாக இறைச்சியுடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இப்போது கடாயில் நெய்யை சூடாக்கி அதில் சிக்கன் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மேலும் மீதமிருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, சீரகத் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் வதக்கவும். கடாயில் இருந்து இறைச்சியை வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளவும்.
அதே மசாலாவில், பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி கெட்டியான பதம் வரும் வரை,வதக்கிக் கொண்டே இருக்கவும்.1/2 கப் தண்ணீர் சேர்த்து, சுமார் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். மசாலாக்களில் பச்சை வாசம் மறைந்ததும், முந்திரி விழுது மற்றும் திராட்சை விழுது சேர்த்துக் கிளறவும். இப்போது தனியான ஒரு பாத்திரத்தில்,எடுத்து வைத்திருக்கும் இறைச்சியை சேர்த்து,நன்றாக கிளறி 10-15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இப்படியாக,நமது பாரம்பரிய சமையலுடன் ஒப்பிட்டு பார்க்கையில், சிறிது இனிப்பு சுவையை கூட்டுவதற்கு, திராட்சையையும், முந்திரியையும், இதில் சேர்த்து, சமைத்து, காரமான கோழி இறைச்சியை சுவைக்கும் அதே நேரத்தில், சிறிது இனிப்பு சுவையும் சுவைக்கும் படியாக, செய்யப்படுவதே, காஷ்மீரி சிக்கன் மசாலாவாகும்.