News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

சமைக்கும்போது காய்கறிகளின் ஊட்டச்சத்து குறையாம இருக்கணுமா? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..

சமைத்த காய்கறி உணவுகளை 2-3 நாள்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்திருந்த பிறகு மீண்டும் சூடுபடுத்துவதால் அவற்றின் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் பாதிக்கு மேல் இழக்க நேரிடுகிறது.

FOLLOW US: 
Share:

காய்கறிகளை பெரிது பெரிதாக நறுக்குவது, நீர் பயன்பாடு போன்ற பல்வேறு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினாலே காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையாமல் சமைத்துக்கொள்ளலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் சத்தான உணவுகளை உண்பது என்பதே கேள்விக்குறிதான். குறிப்பாக தண்ணீர், வெப்பம் மற்றும் ஒளியை நீண்ட நேரம் வெளிப்படுத்துவதால் சில உணவுப்பொருள்கள் வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்து மதிப்பையும் இழக்க நேரிடும். பொதுவாக ஃபிரிட்ஜில் உணவு எவ்வளவு நேரம் சேமிக்கப்படுகிறதோ? அவ்வளவு அதிகமாக ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். எனவே காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்தைத் தக்க வைத்துக்கொள்ளவதற்காக உள்ள வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்வோம்.

காய்கறிகளைப் பயன்படுத்தி சமைப்பதற்கு முன்பாக எப்போதும் காய்கறிகளை கழுவிய பின்னர் நறுக்க வேண்டும். ஆனால் அனைத்துக் காய்கறிகளையும் நறுக்கிய பின்னர் கழுவக்கூடாது. இவ்வாறு செய்யும் போது உங்கள் உணவின் ஊட்டச்சத்து குறைய வாய்ப்பு உள்ளது.

காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்குதல்: காய்கறிகளை எப்போதும் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு வேளை காய்கறிகளை மிகச்சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கும்போது, அவை காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது பெரும்பாலான ஊட்டசத்துக்களை நாம் இழக்க நேரிம்.

நீர் பயன்பாடு: சமைக்கும் போது காய்கறிகளை அதிக தண்ணீரில் கொதிக்க வைக்கக்கூடாது. இதன் மூலம் பல ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். எனவே காய்கறிகளை குறைந்தளவு தண்ணீரில் சமைக்கவும் மற்றும் குறைந்த தீயில் காய்கறிகை மூடி வைத்து சமைக்க வேண்டும். இதனால் ஊட்டச்சத்துக்களை நாம் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

இதோடு நாம் எந்த உணவுப்பொருள்கள் சமைத்தாலும் நான்கு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். தாமதமாக நாம் சமைக்கும் உணவுகளை உட்கொள்ளும் போது ஊட்டச்சத்துக்கள் குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

நாம் காய்கறிகளை சமைக்கும்போது பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தக்கூடாது. ஒரு வேளைப் பயன்படுத்தினால் காய்கறிகளின் வைட்டமின் சி போன்ற சத்துக்களை அழிக்கிறது.

உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி போன்ற வேர்களைக்கொண்ட காய்கறிகளைத் தோலுடன் வேகவைத்து, கொதித்த பிறகுதான் தோலை அகற்ற அகற்ற வேண்டும். இவ்வாறு சமைக்கும் போது காய்கறிகளின் மையத்தில் ஊட்டச்சத்துக்கள் சேகரிக்கவும், மற்றும் ஊட்டச்சத்துக்களை தக்க வைத்துக்கொள்ளவும் உதவியாக உள்ளது.  ஒருவேளை நீங்கள் உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிடும் போது இதில் உள்ள வைட்டமின்சி இழப்புகளுக்கு வழிவகுக்கும். இதோடு கொழுப்பு கலோரிகளை அதிகரிப்பதோடு ஊட்டச்சத்து மதிப்பைக்குறைக்கிறது.

நாம் சமைக்கும் போது புதிதாக நறுக்கிய காய்கறிகளை மட்டும் எப்போதும் சமைக்கவும். இவ்வாறு செய்யும் போது காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அப்படியே இருக்க உதவியாக உள்ளது. மேலும் காய்கறிகளை புத்துணர்ச்சியோடு நீடிக்க, காற்றின் வெளிப்பாட்டைக்குறைக்க காய்கறிகளை எப்போதும் நன்கு மூடி வைக்க வேண்டும். மேலும் ஒருமுறைக்கு மேல் சமைத்த உணவை சூடு செய்து பயன்படுத்தக்கூடது. குறிப்பாக சமைத்தக் காய்கறி உணவுகளை 2-3 நாள்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்திருந்த பிறகு மீண்டும் சூடுபடுத்துவதால் அவற்றின் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் பாதிக்கு மேல் இழக்க நேரிடுகிறது.

Published at : 05 Feb 2022 10:12 PM (IST) Tags: vegetable Cooking nutrients preserve nutrients

தொடர்புடைய செய்திகள்

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

டாப் நியூஸ்

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!