Crispy Vada : பருப்பு முதல் காலிஃப்ளவர் வரை.. மொறு மொறு வடை சில நிமிஷத்துல.. இதோ வந்தாச்சு டெக்னிக்..
பயத்தம் பருப்பு வடை, பெயர் குறிப்பிடுவது போல, இந்த வடை பயத்தம் பருப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது
உளுந்து வடைக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் போல பருப்பு வடைக்கும் பெரிய ரசிகர் படை உண்டு. பருப்பு வடை என்றால் கடலைபருப்பு வடை மட்டும்தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அப்படி இல்லை..விதம்விதமான வெரைட்டியான வடைகளை பட்டியலிடுகிறார்கள் சமையல் கலைஞர்கள்.
அவர்கள் பரிந்துரைபடி நீங்கள் முயற்சிக்க வேண்டிய 5 விரைவான மற்றும் எளிதான பருப்பு வடை ரகங்கள் இங்கே.
1. கடலைபருப்பு வடை, இது ஒரு பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டி, கடலை பருப்பு வடை உங்கள் மாலை கப் தேநீர் அல்லது காபிக்கு உடன் சேர்த்து சாப்பிட சரியான சைட் உணவாகும். அது இல்லாமல் வெறுமனேவும் இதனைச் சாப்பிடலாம். இதன் கூடுதல் சுவைக்கு கூடவே கொஞ்சம் தக்காளி அல்லது புதினா சட்னி சேர்த்துக்கொள்ளலாம்.
2. காளிப்ளவர் வடை , இந்த வடை கடலைப் பருப்பு மற்றும் காலிஃபிளவர் ஆகியவற்றின் கலவையில் தயாரிக்கப்படுகிறது. காலிஃபிளவர் இந்த வடைக்கு அதன் மென்மையான மற்றும் மிருதுவான அமைப்பைக் கொடுக்கிறது, கடலைப்பருப்பு வடைக்கே உண்டான முறுவலைத் தருகிறது. மேலும் காளிபிளவரின் சுவை வடைக்கு கூடுதல் சுவை ஊட்டுகிறது.
3. பயத்தம் பருப்பு வடை, பெயர் குறிப்பிடுவது போல, இந்த வடை பயத்தம் பருப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஊறவைத்த பருப்புடன் தேவைக்கேற்ப மற்றும் சுவை விருப்பத்துக்கு ஏற்ப மசாலாக்கள், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் சில காய்கறிகள் சேர்த்து இந்த வடைக்கான மாவு தயாரிக்கப்படுகிறது. பின்னர் பொன்னிறமாகும் வரை டீப் ஃப்ரை செய்யப்படுகிறது. பயத்தம்பருப்பு உடலுக்குத் தேவையான புரதத்தை வழங்குகிறது என்பது கூடுதல் தகவல்
4. உளுந்து வடை, தென்னகத்தின் தேநீர்கடைகளில் அதிகம் தென்படும் இந்த வடை உண்மையில் ஒரு மிருதுவான பெங்காலி பாணி சிற்றுண்டியாகும். ஆச்சரியமாக இருக்கிறதா? இதனை நீங்கள் 20 நிமிடங்களில் செய்யலாம். இந்த செய்முறைக்கு ஒரு சில பொருட்கள் மட்டுமே தேவை, மேலும் உங்கள் மாலைக் கோப்பை தேநீருடன் சேர்த்து சாப்பிடவும் காலை சிற்றூண்டியுடன் சேர்த்து சாப்பிடவும் இது சிறந்த சைட் உணவாக அமையும்.
5. கல்மி வடா எனப்படும் முப்பருப்பு வடை ராஜஸ்தான் பாணி வடையாகும். இது உளுத்தம் பருப்பு, கொண்டைக்கடலை பருப்பு மற்றும் மூங்கில் பருப்பு ஆகியவற்றின் கலவையில் தயாரிக்கப்படுகிறது. காரமான மிளகாய் சட்னியுடன் இதனைச் சாப்பிடலாம். குளிர்கால மலை உணவுக்கு ஏற்ற சிற்றுண்டியாக இது அமைகிறது.
அப்புறம்? இன்னும் என்ன வெயிட் செஞ்சிட்டு இருக்கிங்களா? வீட்டுக்கு நண்பர்கள், உறவினர்கள் திடீரென வருகை தந்தால் எப்படி சமாளிப்பது என இனி கொஞ்சமும் குழப்பம் வேண்டாம். இந்த வடை ரெசிபிக்கள் இருக்கவே இருக்கு.