News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Vendhaya Keerai Chutney : வெந்தய கீரையில் சுவையான சட்னி.. இட்லி, தோசைக்கு சூப்பரான சைட் டிஷ்..

சுவையான வெந்தய கீரை சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

கீரைகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துகள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இதனால் நாம் கீரைகளை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த வகையில் வெந்தய கீரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. தற்போது வெந்தய கீரையை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என்றுதான் கத்துக்க போறோம்.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு,1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, 1மேசைக் கரண்டி சீரகம், 2 வர மிளகாய், 8 பல் பூண்டு, பாதி நெல்லிக்காய் அளவு புளி, தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை 1 கொத்து, 1 பெரிய வெங்காயம்,1 கட்டு வெந்தயக் கீரை, 1/4 மூடி தேங்காய்.

செய்முறை

முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், கொத்தமல்லி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பின்பு, வர மிளகாய், பூண்டு, புளி, உப்பு, கறி வேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கொள்ளவும்.

இதனுடன் வெந்தயக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைத்து  மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் தேங்காயும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வெந்தய கீரை சட்னி தயார். 

வெந்தய கீரையின் நன்மைகள் 

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

மூல நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு வெந்தய கீரை மிக சிறந்த மருந்தாகும். மேலும் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. 

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும்.

வெந்தய கீரை, சொறி, சிரங்கை நீக்கும் என சொல்லப்படுகிறது.

மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை வெந்தயக்கீரை குணப்படுத்தும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க 

ABP-C Voter Opinion Poll: I.N.D.I.A கூட்டணியின் முகமாக மாறும் ராகுல் காந்தி? மம்தா, கெஜ்ரிவாலுக்கு கல்தாவா? - கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்

Ennore Gas Leak: எண்ணூரில் வாயுக்கசிவு - கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு

Published at : 27 Dec 2023 02:22 PM (IST) Tags: chutney recipe Healthy Chutney fenugreek leaves chutney

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்

Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்

AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்

AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்

TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?

Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?