News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

கபாப் விரும்பியா நீங்கள்? இந்த மாதிரியெல்லாம் சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க… செய்முறை இதோ!

செஃப் வருண் இனாம்தாரின் 'கோல்டன் கலூட்டி நெய்ச்சோரு' மற்றும், அவன்த் கார்டே சீக் பக்வான் ரெசிபிகள் கபாபை விரும்பும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

FOLLOW US: 
Share:

கபாப்களுக்கென்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறது என்றால் அதன் பாரம்பரியத்தையும், அதன் மீது உள்ள ஈர்ப்பையும் நாம் கணக்கிட்டு கொள்ளலாம். ஆண்டுதோறும் ஜூலை 14 அன்று இந்த கபாப் தினம் கொண்டாடப்படுகிறது. முகலாய உணவான இதற்கு இஸ்லாமிய நாடுகளை விட இந்தியாவில்தான் ரசிகர்கள் அதிகம்.

அதற்கு காரணம் இந்த உணவின், இறைச்சியும், மசாலாவும் சேரும் அந்த சூட்சுமம் தான். நமது தேசத்தின் கலாச்சார பன்முகத்தன்மையை நினைவு கூறவும், கபாப்களை சுவைப்பதற்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது. பலர் இந்த நாளில் ருசியான கபாப்களை வீட்டிலேயே செய்து உண்டு இந்த நாளை கொண்டாடுவார்கள். பிரத்யேகமாக செஃப் வருண் இனாம்தாரின் 'கோல்டன் கலூட்டி நெய்ச்சோரு' மற்றும், அவன்த் கார்டே சீக் பக்வான் ரெசிபிகள் கபாபை விரும்பும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

செஃப் வருண் இனாம்தாரின் 'கோல்டன் கலூட்டி நெய்ச்சோரு'

தேவையான பொருட்கள்

1 கப் சிவப்பரிசி

3 டீஸ்பூன் நெய்

1 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை

1 கப் பெரிய வெங்காயம் (சிறிதாக நறுக்கியது)

1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்

1 ஜாதி பத்திரி

4-5 கிராம்புகள்

2 ஏலக்காய்கள்

1 துண்டு இலவங்கப்பட்டை

1 பேலீஃப்

2 சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது)

½ தேக்கரண்டி உப்பு

2 கப் தண்ணீர்

கோத்ரெஜ் யம்மிஸ் சிக்கன் கலூட்டி கபாப்

தொடர்புடைய செய்திகள்: IND Vs WI: மேற்கிந்திய தீவுகளை பொட்டலம் கட்டிய இந்தியா, அஸ்வின் மாயாஜாலம்..! இன்னிங்ஸ் & 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

செய்முறை:

  1. ஓடும் நீரில் இரண்டு முறை அரிசியைக் கழுவி வடிகட்டவும். புதிய தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும்.
  3. அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கேரமலைஸ் செய்யவும்.
  4. நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயம் இரண்டையும் சேர்க்கவும். அவை கோல்டன் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
  5. அரிசி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  6. தீயை அதிகமாக வைத்து, 6 நிமிடங்கள் சமைக்கவும். குறைந்த தீயில் 8 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும்.
  7. தீயை அணைத்து, 5 நிமிடங்களுக்குப் பிறகு மூடியை திறந்து, ஒரு கரண்டியைப் பயன்படுத்தி அரிசியைப் பிரட்டி விடவும்.
  8. கோத்ரெஜ் யம்மிஸ் சிக்கன் கலூட்டி கபாப்ஸை நன்றாக வறுத்து, இந்த 'கோல்டன் நெய் புலாவ்' உடன் பரிமாறவும்.
  9. இதை நீங்கள் விரும்பும் ரைதா அல்லது சாதாரண தயிர் சேர்த்து பரிமாறலாம்.

செஃப் வருண் இனாம்தாரின் அவன்த் கார்டே சீக் பக்வான்

தேவையான பொருட்கள்:

1 கப் கோதுமை மாவு

1/2 கப் மைதா

2 டீஸ்பூன் நெய்

1/2 தேக்கரண்டி உப்பு

1/2 கப் சூடான தண்ணீர்

1 தேக்கரண்டி சீரகம்

எண்ணெய்

மிக்ஸ் 

கொத்தமல்லி தயிர்

புளி தயிர்

மிளகாய் (சிறிதாக நறுக்கியது)

தக்காளி (சிறிதாக நறுக்கியது)

கொத்தமல்லி இலைகள்

மசாலா சன்னா பருப்பு

முள்ளங்கி (நீட்டமாக நறுக்கியது) 

வெங்காயம் (சிறிதாக நறுக்கியது)

கோத்ரெஜ் யம்மீஸ் சிக்கன் சீக் கபாப்

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில், பக்வானுக்கான அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.
  2. ஈரமான துணியை போட்டு அந்த பாத்திரத்தை மூடி, 5 நிமிடங்கள் மாவை தனியாக வைக்கவும்.
  3. பிறகு அந்த மாவை எடுத்து, எலுமிச்சை அளவு உருண்டைகளை உருட்டி, கெட்டியான சப்பாத்திகளாக தேய்க்கவும். அதன் மீது போர்க்கை வைத்து மேலே குத்தி சிறிய சிறிய துளைகள் உண்டாக்கவும்.
  4. மிருதுவாகும் வரை குறைந்த தீயில் ஆழமாக வறுக்கவும்.
  5. கோத்ரெஜ் யம்மீஸ் சிக்கன் சீக் கபாப்பை மிருதுவாகவும் பொன்னிறமாகவும் வறுக்கவும்.
  6. முள்ளங்கி, கொத்தமல்லி தயிர், புளி தயிர், மிளகாய், தக்காளி துண்டுகள், வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இறுதியாக மசாலா சன்னா பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
  7. சூடாக பரிமாறவும்.
Published at : 02 Oct 2023 09:47 PM (IST) Tags: chef World kebab day Kebab Kebab day Kebab lovers World kebab day 2023 Chef Varun inamdar Varun inamdar Chef Varun inamdar's kebab recipe Kebab recipe Kebab dishes Tasty kebab recipe

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு

"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!

Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா

Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா

TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்

TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்