CICO Diet : கலோரி இன் கலோரி அவுட் டயட் (சிஐசிஓ) உடல் பருமனை குறைக்க உதவுகிறதா? CICO டயட் பலன் கொடுக்குமா?
சமூக ஊடகங்களில் தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது சிஐசிஓ டயட். உடற்பயிற்சி ஆர்வலர்கள் முதல் ஆரோக்கிய நிபுணர்கள் வரை அனைவரும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது சிஐசிஓ டயட். உடற்பயிற்சி ஆர்வலர்கள் முதல் ஆரோக்கிய நிபுணர்கள் வரை அனைவரும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்வோம்.
இந்த டயட்டைப் பற்றி தெரியாத அனைவருக்கும், CICO டயட் என்பது "கலோரி இன், கலோரிகள் அவுட்" என்பதன் சுருக்கமான வடிவமாகும். இது ஒரு நபரின் உணவில் கலோரி பற்றாக்குறையை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் எடை இழப்பு அணுகுமுறையாகும். இந்த டயட் ஒரு நபர் உடல் எடையை குறைக்க, ஒருவர் எரிக்கக்கூடிய கலோரிகளை விட குறைவான கலோரிகளை உட்கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் இது எந்த குறிப்பிட்ட உணவு குழுக்களையும் கட்டுப்படுத்தாது. மாறாக உணவு அளவுக் கட்டுப்பாடு மற்றும் கலோரி உட்கொள்ளலை தொடர்ந்து கண்காணிப்பதை எடுத்துக்காட்டுகிறது.
நீங்கள் உட்கொண்ட மற்றும் செலவழித்த கலோரிகளைக் கண்காணித்து சமநிலைப்படுத்தினால், CICO டயட்டைப் பின்பற்றுபவர்கள் எடை இழப்பை அடையவும், ஒட்டுமொத்த கலோரி சமநிலையை திறம்பட நிர்வகிக்கவும் முடியும்.
CICO டயட்டைப் பற்றிய பல அறிக்கைகளில், இது வெறும் ஒரு டயட் என்பதை விட கலோரி பற்றாக்குறை மற்றும் உணவின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு மையமாகக் கொண்ட டயட் எனலாம் என்கிறது. பல ஆண்டுகளாக, நிறைய ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த விரும்பும் பல நபர்கள் இந்த டயட்டை கடைப்பிடிக்கும் ஒரு வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள்.
எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உங்கள் உடலின் கலோரி தேவை ஒரு நாளைக்கு 2500 கலோரிகள் மற்றும் நீங்கள் ஒரு நாள் முழுவதும் 1800 கலோரிகளை மட்டுமே உட்கொண்டால், நீங்கள் 700 கலோரிகள் பற்றாக்குறையுடன் இயங்குவீர்கள். இது ஆரோக்கிய அம்சத்தின் அடிப்படையில் பார்த்தால் அதிகம். உங்கள் உடலில் கலோரிகள் குறைவாக இருப்பதால், நீங்கள் விரைவாக எடையைக் குறைக்கலாம். இருப்பினும், ஒருவர் எடையைக் குறைக்க இந்த டயட் மற்றும் உதவி செய்யப் போவதில்லை, உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.