News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Broccoli Paneer Rice: ஹெல்தி லஞ்ச் பாக்ஸ் டிஷ் ப்ரோக்கோலி - பனீர் ரைஸ் ரெசிபி!

Broccoli Paneer Rice: ப்ரோக்கோலி - பனீர் ரைஸ் செய்முறை பற்றி காணலாம்.

FOLLOW US: 
Share:

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும், ருசியாகவும் சாப்பாடு ஏதும் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஐடியா உள்ளவர்கள் ப்ரோக்கோலி - பனீர் ரைஸ் ட்ரை பண்ணி பாருங்க.

என்னென்ன தேவை?

வேக வைத்த சாதம் - ஒரு கப்

சிறிய துண்டுகளாக நறுக்கிய ப்ரோக்கோலி - ஒரு கப்

சிறிய துண்டுகளாக நறுக்கிய பனீர் - ஒரு கப்

நறுக்கிய வெங்காயம் - அரை கப்

மிளகு தூள் - ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்

கரம் மசாலா - ஒரு ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

சோயா சாஸ் - அரை ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஏலக்காய் போட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதோடு ப்ரோக்கோலி சேர்த்து நன்றாக வதங்கட்டும். ப்ரோக்கோலி வெந்ததும் அதோடு பனீர் சேர்த்து நன்றாக வதக்கவும். இதோடு, சோயா சாஸ், கரம் மசாலா, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் எல்லாம் சேர்த்து நன்றாக வதங்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும். சுவையான ப்ரோக்கோலி - பனீர் ரைஸ் ரெடி. இதில் முந்திரி சேர்த்துகொள்ளலாம்.

புதினா இலையில் பல்வேறு மருத்துவ ரீதியான குணங்கள் இருப்பதால், தினமும் புதினா டீ பருகினால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க முடியும் என்கின்றனர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள். புதினாவை செடியில் பச்சைப்பசேல் என்று பார்க்கும் போது ஏற்படும்  புத்துணர்ச்சித்தான்,  அதனை உணவில் சேர்த்து உட்கொள்ளும் போது நமது உடலிலும் கட்டாயம் ஒரு ப்ரஷ்னஸ் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும், புதினாவில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது போல, மருத்துவக்குணங்களும் அதிகளவில் உள்ளது. எனவே நமக்கான நாளை தொடங்குவதற்கு முன்னதாக தினமும் காலையில் புதினா டீ பருகினால் நிச்சயம் புது வித ப்ரஷ்னஸ் தான் நமக்குக் கிடைக்கும். குறிப்பாக மழைக்காலம் மற்றும் வெயில் காலம் என அனைத்துப் பருவநிலைக்கு ஏற்ற ஒரு அருமையான மூலிகை தான் புதினா. புதினா சாதம் எப்படி செய்வது என்று காணலாம்.

தேவையான பொருட்கள்

சாதம் - ஒரு கப்

புதினா கட்டு - 1

வெங்காயம் -இரண்டு

துருவிய தேங்காய் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 2 

தாளிக்க

கடுகு - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

நிலக்கடலை / முந்திரி - ஒரு ஸ்பூன்

செய்முறை

புதினா, துருவிய தேங்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். மிதமான தீயில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் அதில் புதினா விழுதை சேர்த்து வதக்கவும்.

வதங்கும்போதே அதன் நிறம் மாறும். அப்போது சாதத்தை அதில் சேர்த்து கிளறி இறக்கிவிடவும். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வறுத்த மீன், பீப் தவா கறி என உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம். புதினாவை அரைக்கும்போது மைய அரைத்துவிட வேண்டாம். கொஞ்சம் கசப்புத்தன்மை வந்துவிடும்.  இதே செய்முறையில் கொத்தமல்லி சாதமும் செய்து அசத்துங்க. 

Published at : 11 Jan 2024 08:55 PM (IST) Tags: lunch box Broccoli Paneer Rice Lunch Box Rice

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Thalapathy Vijay: "எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

Thalapathy Vijay:

Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்

Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்

Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!

Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!

Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு