News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Diabetes : பாகற்காய் ஊறுகாய் ரெசிப்பி ட்ரெண்டாவது ஏன்? நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு ட்ரீட்.. இதைப்படிங்க..

உடலில் இன்சுலினின் இயல்பான கட்டுப்பாட்டை வைத்திருப்பது உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக பாகற்காய் அறியப்படுகிறது

FOLLOW US: 
Share:

நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால் பாகற்காயில் பலவிதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று பாகற்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். 

இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.உடலில் இன்சுலினின் இயல்பான கட்டுப்பாட்டை வைத்திருப்பது உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக பாகற்காய் அறியப்படுகிறது. இது கொழுப்பாக மாறுவதைத் தடுப்பதன் மூலம் சர்க்கரையை சரியான முறையில் பயன்படுத்த உதவுகிறது, இது சரியான இன்சுலின் நிர்வாகத்திற்கு உதவுகிறது.

அதிக சத்துக்கள் இருப்பதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு பாகற்காய் சாப்பிடுவதை சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பாகற்காய் சாப்பிடுவதற்கு பல வழிகள் உள்ளன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி வழங்கப்படும்.

பொதுவாக வீடுகளில் உணவுகளில் இந்த பாகற்காயை நாம் சேர்த்துக் கொண்டாலே நீரழிவு என்பது ஓரளவு கட்டுக்குள் இருக்கும். தனியாக நீர்ழிவு நோய் வந்த பின்னர் சாப்பிடாமல், முன்னதாகவே நமது அன்றாட சமையலில் பாகற்காயை உணவாக நாம் சேர்த்துக் கொள்ளும் போது நாம் நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறோம்.

செய்முறை:

 பாகற்காய் ஊறுகாய் செய்வதற்கு தேவையானவை :

7-8 நடுத்தர அளவிலான பாகற்காய்
1 டீஸ்பூன் வினிகர் அல்லது 2 எலுமிச்சை சாறு

1 கப் கடுகு எண்ணெய்
2 தேக்கரண்டி ஜீரா (சீரகம்)
½ தேக்கரண்டி கரம் மசாலா
2 தேக்கரண்டி  வெந்தயம்
3 தேக்கரண்டி உப்பு
4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகள்
1 தேக்கரண்டி கருப்பு உப்பு
2 டீஸ்பூன் நசுக்கிய மஞ்சள் கடுகு
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்

பாகற்காயை நன்றாக கழுவி துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . அதன்பின்னர் சிறிது சிறிதாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்க வேண்டும்.

இந்த கலவையை சரியாக  ஒரு நாள் வரை மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது. மறுநாள், வாணலியில் இரும்பு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விட வேண்டும்.

அத்துடன் பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும். மிளகாய்த்தூள் போட்ட மறு நிமிடமே உப்பில் ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை அல்லது எலும்பிச்சை பழத்தின் சாற்றை சேர்க்க வேண்டும். இது நன்றாக வற்றும் வரை கிளறிவிட வேண்டும். அதன்பின்னர் எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஊறுகாய் பதத்திற்கு வந்ததும், அதனை ஆறவைத்து  கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும்.  இப்போது சுவையான சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.

நீரிழிவு நோய்க்கு ஏன் நல்லது :

நீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடுமையான நோயாக இருக்கிறது. இந்த வகையான நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக செயல்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது பாகற்காய்.

பாகற்காயை ஊறுகாய் மட்டுமல்ல அதனை நீங்கள் வீட்டில் சாலடாக, பொறியலாக ,குழம்பாக ,பல்வேறு விதங்களில் செய்து சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை உட்கொள்ளலாம். அதே போல் நாட்டு மருந்து, சித்தா, அலோபதி மருந்து எடுப்பவர்கள் மருத்துவரின் அறிவுரையுடன் இந்த பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Published at : 19 Sep 2022 09:36 AM (IST) Tags: Diabetes recipe Bitter Gourd Pickle Karela Achar

தொடர்புடைய செய்திகள்

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

டாப் நியூஸ்

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!