Fresh Egg : சமைக்குறதுக்கு முன்னாடி முட்டை ஃப்ரெஷ்ஷா இருக்கான்னு தெரிஞ்சுகோங்க.. இதோ 5 வழிகள்..
நாம் முட்டையை உண்ணுவதற்கு முன் அவை ஃப்ரெஷ்ஷானதா? அல்லது கெட்டுப்போனதா? என்பதை எப்படி எளிமையாக கண்டறியலாம் என யோசித்திருக்கிறீர்களா?
பழங்கள், காய்கறி வகைகள், தானியங்கள் ஆகியவை கெட்டுப்போனால் அதை நாம் எளிதில் கண்டறிந்து விட முடியும். அதன் தோற்றம் மாறி இருக்கும் மேலும் துர்நாற்றத்தை உணர முடியும். இப்படி பல வகைகளில் நாம் அதை எளிதில் கண்டுப்பிடிக்க முடியும். ஆனால் முட்டைகள் கெட்டுப் போனால் அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது பலருக்கும் பெரும் சவலாக உள்ளது. அப்படித்தானே? கெட்டுப் போன முட்டைகளை உட்கொண்டால் அதனால் பல்வேறு உடல் உபாதைகள், நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நாம் உண்ணும் முட்டைகள் கெட்டுப்போகாத நல்ல முட்டைதானா? என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
நல்ல முட்டைகளை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள்..
1. ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் நீங்கள் பரிசோதிக்க நினைக்கும் முட்டையை மெதுவாக விட வேண்டும். முட்டை தண்ணீரில் முழுவதுமாக மூழ்கி அது பாத்திரத்தின் அடிப்பகுதிக்கு சென்று விட்டால், அது நல்ல முட்டை. முட்டை தண்ணீரில் செங்குத்தாக இருந்தால் அது சற்று பழைய முட்டை. முட்டை தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று அர்த்தம். இதை நிச்சயம் சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது.
2. முட்டைகளை உடைத்துப் பார்த்து அது நல்ல முட்டையா என்பதை அறிந்து கொள்ள முடியும். ஒரு முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றினால், அதன் கருப்பகுதியில் சிவப்பு புள்ளிகள் அல்லது ஏதேனும் நிறமாற்றம் இருந்தால் அது நல்ல முட்டை இல்லை என கூறப்படுகிறது.
3. லைட்டாக உடைந்த முட்டைகளில் இருந்து துற்நாற்றம் அல்லது கந்தக மனம் வந்தால் அவை கெட்டுப்போன முட்டை என கூறப்படுகிறது.
4. முட்டையை எடுத்து நம் காதுகளுக்கு அருகில் வைத்து அவற்றை லேசாக குலுக்கிப் பார்க்க வேண்டும். அதில் திரவம் குலுங்குவதைப் போன்று தெரிந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று அர்த்தம்
5. ஒரு பச்சை முட்டையை எடுத்து உடைத்துப் பார்த்தால், அதன் அமைப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது பூஞ்சை தாக்கமாக இருக்கலாம். அந்த முட்டையின் மஞ்சள் கரு தட்டையாக இருந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று அர்த்தம்.
முட்டைகளில் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் அந்த சத்துக்களை காலப்போக்கில் முட்டைகள் இழக்கின்றன. இந்த நிலையில், நுண்ணுயிரிகள் முட்டைக்குள் வளர்ச்சி அடைகிறது. இந்த முட்டைகளை நாம் உண்ணும் போது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முட்டைகளை வாங்கி அவற்றை முறையாக பாதுகாப்பாக வைக்க வேண்டும். அட்டைப் பெட்டியுடன் விற்கப்படும் முட்டைகளில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை கெட்டுப் போக வாய்ப்புள்ளது. உணவு நிபுணர்களின் கூற்றுப்படி, அறை வெப்பநிலையில் (ஆனால் குளிர்ந்த உலர்ந்த இடத்தில்) ஏழு முதல் எட்டு நாட்களுக்கு முட்டைகளை வைக்கலாம். இந்த முட்டைகளை நன்றாக குளிர்ச்சியான இடத்தில் வைத்தால், அவை 45 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், முட்டைகளை ஃப்ரீசரில் வைத்தால் சுமார் ஆறு மாதங்கள் வரை வரை அவை கெட்டுப்போகாமல் இருக்கும் என கூறப்படுகின்றது. இருந்த போதிலும் இது போன்ற உணவு பொருட்களை முடிந்த அளவு வாரத்திற்கு ஒரு முறை புதியதாக வாங்கி உண்ணுவது உடலுக்கு நல்லது.